2020-ல் நீங்கள் இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்..!

Why You Should Be Careful While Writing Dates On Cheques In 2020?

இந்த 2019 ஆண்டு நிறைவுபெற இன்னும் சில நாட்களே உள்ளன. நாம் அனைவரும் 2020 ஆம் ஆண்டை நோக்கி பயணிக்க இருக்கின்றோம். இந்த புத்தாண்டை முன்னிட்டு சில குறிப்புகளை நாம் அறிந்துகொள்வது அவசியமான ஒன்றாக இருந்து வருகிறது.

2020ஆம் ஆண்டில் ஏதாவது தேதியை எழுதும்போது, ​​அதன் முழு வடிவத்தில் எழுத வேண்டும். எடுத்துக்காட்டாக, 31/01/2020 என்பதை 31/01/20 என எழுத வேண்டாம். அதை 31/01/2000 அல்லது 31/01/2022 அல்லது எந்த வருடத்திற்கும் இடையில் தனது வசதிக்கு ஏற்ப மாற்றி அமைக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

காசோலைகள் மற்றும் எந்த முக்கியமான ஆவணத்திலும் இதுபோன்று செய்யப்படலாம். எனவே கவனமாக இருங்கள், அப்படி எழுதியிருந்தால் அதை ஏற்றுக்கொள்ளாதீர்கள். இந்த சிக்கல் 2020-ம் ஆண்டில் மட்டுமே நீடிக்கும் என்றும் கூறப்படுகிறது.

எனவே இது குறித்து எச்சரிக்கையாக இருங்கள். எந்த ஆவணங்களிலும் இதுபோன்று எழுத வேண்டாம், அப்படி எழுதி இருந்தால் அதை ஏற்றுக்கொள்ளவும் வேண்டாம். வரும் முன் காப்பதே சிறந்தது என்பதை நினைவில் கொள்வோம்.