HDB அடுக்குமாடி குடியிருப்பு வீட்டின் ஜன்னல் விளிம்பில் அமர்ந்து எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் பெண் ஒருவர் சாதாரணமாக சுத்தம் செய்யும் வீடியோ இன்று ஃபேஸ்புக்கில் வெளியாகியுள்ளது.
அரை நிமிடம் ஓடும் அந்த வீடியோவில் மஞ்சள் நிற டி-ஷர்ட் அணிந்த பெண், எந்த வித முன்னெச்சரிக்கை பாதுகாப்பு கவசமும் இன்றி ஜன்னலின் வெளிப்புறத்தை சுத்தம் செய்வதற்காக ஜன்னலில் தொங்கிக் கொண்டிருப்பதைக் காண முடிந்தது.
இந்த சம்பவம் Tampines பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீடு ஒன்றில் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வீடியோ மூலம் அவர் சுத்தம் செய்யும் வீடு தரை தளத்தில் இல்லை என்பதை புரிந்துகொள்ள முடிகிறது, மேல் தளங்களில் அந்த பெண் சுத்தம் செய்வதை புரிந்துகொள்ளலாம்.
அந்த பதிவில் பெண்ணின் செயல் ஆபத்தானது என்று அனைவரும் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும், அந்தப் பெண் வெளிநாட்டு வீட்டுப் பணிப்பெண் என்றும் கூறுகின்றனர்.
அந்தப் பெண் வெளிநாட்டு வீட்டு வேலை செய்பவராக இருந்தால், அவரின் முதலாளி தான் இதற்கு பொறுப்பு என்று பலர் குற்றம் சாட்டினர்.
சிங்கப்பூரில் புகழ்பெற்ற “Mr and Mrs Mohgan’s” கடையின் உரிமையாளர் “சோமசுந்தரம் மோகன்” காலமானார்