வேலையில்போது மின்சாரம் பாய்ந்து ஊழியர் பலி: தகுந்த பாதுகாப்பில்லை.. சிக்கிய முதலாளி – S$100,000 அபராதம்

retrenchments-2024-increase-ntuc-measures

சிங்கப்பூரில் வேலையில்போது ஊழியர் ஒருவர் உயிரிழந்தது தொடர்பில் பெண்ணுக்கு S$100,000 அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ரோலர் ஷட்டர் என்னும் இரும்பு ஷட்டரை மாற்றும் பணியின்போது ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார், அதன் தொடர்பாக 65 வயதான லீ ஈ டென் என்ற பெண்ணுக்கு நேற்று (செப். 20) அபராதம் விதிக்கப்பட்டது.

உயிரிழந்த எலக்ட்ரீஷியன் திரு டோங் பாரோங்கின் முதலாளி தான் அந்த பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த ஊழியர் கைது – லுக்அவுட் குற்றாவளி என தட்டி தூக்கிய போலீஸ்

பணியில் இருக்கும் தனது ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தவறிய குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார்.

2019 ஆம் ஆண்டு நவம்பர் மாத தொடக்கத்தில், 31 சாங்கி சவுத் அவென்யூ 2ல் உள்ள ட்ரைடெக் கட்டிடத்தில் ரோலர் ஷட்டரின் மோட்டாரை மாற்றுவதற்கு Tan Kim Seng என்ற நிறுவனம் வேலைக்கு அமர்த்தப்பட்டது.

திரு டோங், ரோலர் ஷட்டர் மோட்டாரின் ஐசோலேட்டரை அணைக்க அலுமினிய ஏணியில் ஏறி மோட்டாரை மாற்றத் தொடங்கினார். அப்போது ஏணியில் மின்சாரம் பாய்ந்து அவர் இறந்ததாக சொல்லப்பட்டுள்ளது.

இதில் முழு பாதுகாப்பு அளிக்கவேண்டியது திருமதி லீயின் பொறுப்பு என்பதை விளக்கிய நீதீமன்றம் அபராதம் விதித்தது, அதே போல ஊழியர்களுக்கு அவர் முறையான பயிற்சி அளிக்கவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பெண்… நாசம் செய்த வெளிநாட்டு ஊழியர் – சிறை தண்டனை விதிப்பு