COVID-19: சிங்கப்பூரில் இரண்டு தங்கும் விடுதிகளில் சுமார் 19,800 வெளிநாட்டு ஊழியர்கள் தனிமை..!

spore tamil worker wife death

சிங்கப்பூரில் இரண்டு வெளிநாட்டு ஊழியர்கள் தங்குமிடங்களில் புதிய COVID-19 சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, மேலும் பரவாமல் தடுக்க அந்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

புதிய சம்பவங்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கை, இரண்டு வெளிநாட்டு ஊழியர்கள் தங்குமிடங்களுடன் தொடர்புடையது.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் ஒரே நாளில் 120 பேருக்கு தொற்று உறுதி..!

அதாவது S11 Dormitory @ Punggol மற்றும் Westlite Toh Guan ஆகிய வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் முறையே 22 மற்றும் 10 புதிய சம்பவங்கள் தொடர்பு உடையவை.

இரண்டு தங்குமிடங்களில் மொத்தம் 19,800 ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் அடுத்த 14 நாட்களுக்கு அவர்களின் அறைகளில் தங்க வேண்டியிருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் உள்ள மற்ற அனைத்து வெளிநாட்டு ஊழியர்கள் தங்குமிடங்களிலும் மேலும் பாதுகாப்பான இடைவெளி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

“இந்த அனைத்து நடவடிக்கைகளின் முக்கிய குறிக்கோள், உண்மையில் அனைவரின் ஆரோக்கியத்தையும் உறுதி செய்வதாகும். சிங்கப்பூர் குடிமக்கள் மட்டுமல்ல, இங்குள்ள வெளிநாட்டு ஊழியர்களும், நமது பொருளாதாரத்திற்கு உதவுகிறார்கள் என்று மனிதவள அமைச்சர் ஜோசபின் தியோ கூறியுள்ளார்.

மேலும் அவர்களுக்கு உணவும், முக கவசங்கள், வெப்பமானிகள், கிருமி நாசினி திரவம் போன்ற சுகாதாரப் பொருள்களும் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊழியர்கள் ஒன்றுகூடுவதைத் தவிர்க்கும் நோக்கில் அவர்களுக்கு வெவ்வேறு நேரங்களில் உணவு வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : இந்தியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளிலிருந்து சிங்கப்பூர் திரும்புவோர் 14 நாள் ஹோட்டலில் தனிமை..!