“மதுரை-சிங்கப்பூர்” விமான சேவை.. ஊழியர்களை உள்ளே வைத்து பூட்டிய அதிகாரிகள் – விமான சேவை தடை ஏற்படும் அபாயம்!

singapore madurai airport gold

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சிலரை கடந்த செவ்வாய்க்கிழமை இரவு மதுரை விமான நிலையத்திற்குள் வைத்து அடைந்ததாக புகார் எழுந்துள்ளது.

தொழில் பாதுகாப்பு படையினர் (CISF) அவர்களை உள்ளே வைத்து அடைத்ததாகவும், அவர்கள் சுமார் ஒரு மணி நேரம் சிக்கித் தவித்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறும் உள்துறை அமைச்சகத்தை, தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

சிங்கப்பூரில் இரண்டு வெளிநாட்டு ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழப்பு – துவாஸ் கப்பல் தளத்தில் நடந்த சம்பவம்

அதன் தலைவர் என்.ஜெகதீசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை-சிங்கப்பூர் விமான சேவைக்கு CISF வீரர்கள் ஒத்துழைக்க மறுப்பதாகக் கூறினார்.

கோவிட்-19 காரணமாக நிறுத்தப்பட்ட விமான சேவைகள் கடந்த செவ்வாய்க்கிழமை மீண்டும் தொடங்கியுள்ளன.

விமானம் அன்று இரவு 9.35 மணிக்கு புறப்பட இருந்தது. அப்போது CISF வீரர்கள் இரவு 9.30 மணியளவில் விமான நிலைய முனைய கட்டிடத்தின் கதவுகளை பூட்டியதாக திரு. ஜெகதீசன் குற்றம் சாட்டினார்.

“இதனால், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்கள் சுமார் 20 பேர் தங்கள் பணி முடிந்து டெர்மினல் கட்டிடத்தை விட்டு வெளியே வர முடியவில்லை.”

விமான நிலைய இயக்குனரிடம் இந்த பிரச்சனை சென்ற பிறகே, CISF வீரர்கள் கதவுகளைத் திறந்தனர். இதனால் ஊழியர்கள் இரவு ஒரு மணி நேரம் தாமதமாகத் தவித்தனர் என திரு. ஜெகதீசன் கூறினார்.

மதுரை-சிங்கப்பூர் நேரடி விமான சேவை தென் தமிழகத்துக்கு மிக முக்கிய ஒன்று. அதாவது தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு இந்த சேவை பெரும் தூண்டுகோலாக உள்ளது.

ஆனால், CISF வீரர்களின் இந்த செயல்பாடு, இரு வழித்தட விமான சேவையை தொடர்ந்து இயக்குவதில் சிக்கலை ஏற்படுத்தி, தடை ஏற்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

சிங்கப்பூருக்கு பயணம் இனி இலகுவாகும்…தனிமை, பரிசோதனை இல்லை – தொற்றுக்கு முன் இருந்த வசந்த காலம்!