சிங்கப்பூரில் இரண்டு வெளிநாட்டு ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழப்பு – துவாஸ் கப்பல் தளத்தில் நடந்த சம்பவம்

Google Maps

துவாஸில் உள்ள கெப்பல் கப்பல் தளத்தில் திங்கள்கிழமை (மார்ச் 28) இரவு நிறுத்தப்பட்டிருந்த கப்பலில் இருந்து தூக்கி வீசப்பட்ட இரண்டு வெளிநாட்டு ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அவர்கள் 42 மற்றும் 30 வயதுடைய இரண்டு பங்களாதேஷ் ஊழியர்கள் என்று மனிதவள அமைச்சகம் (MOM) புதன்கிழமையன்று கூறியது.

சிங்கப்பூருக்கு பயணம் இனி இலகுவாகும்…தனிமை, பரிசோதனை இல்லை – தொற்றுக்கு முன் இருந்த வசந்த காலம்!

சுமார் 20 மீ உயரத்தில் இருந்து அவர்கள் தூக்கி எறியப்பட்ட பின்னர் உயிரிழந்ததாகவும் MOM கூறியுள்ளது.

3 ஊழியர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்

கப்பலின் மேல் அமைந்திருக்கும் கட்டமைப்பைச் சுற்றி கட்டப்பட்டிருக்கும் மேடையில் 3 ஊழியர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர், அதில் அவர்கள் இருவரும் அடங்குவர்.

இரவு 10 மணியளவில், கட்டமைப்பு திடீரென இடிந்து விழுந்தது, இதனால் மேடையின் ஒரு பகுதி கப்பலில் இருந்து தூக்கி வீசப்பட்டதால் அவர்கள் வெளியே வீசப்பட்டனர் என்று MOM கூறியது.

மருத்துவ உதவியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தபோது, அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.

மூன்றாவது ஊழியர்

25 வயதான மூன்றாவது ஊழியரும் பங்களாதேஷ் நாட்டவர். அவசரகால குழுவால் அவர் காப்பாற்றப்பட்டார் என்று அமைச்சகம் கூறியது.

அவர் Ng Teng Fong பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்றும் அது கூறியது.

இது தொடர்பாக மனிதவள அமைச்சகம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

“டெர்மினல் 2 படிப்படியாக திறக்கப்படும்”: எல்லைகள் மீண்டும் திறக்கப்படுவதால் விமான நிலைய ஆட்சேர்ப்பு அதிகரிக்கும்!