சிங்கப்பூர் சந்தையில் இருந்து வெளியேறுவதாக ‘Best Electricity’ நிறுவனம் அறிவிப்பு!

Photo: Wikipedia

சிங்கப்பூரில் மின்சார விநியோக சேவையில் ஈடுபட்டு வரும் முன்னணி நிறுவனங்களில் ஒன்று ‘Best Electricity’ நிறுவனம். இந்த நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் நேற்று (19/10/2021) வெளியிட்டிருந்த அறிவிப்பில், “சிங்கப்பூர் சந்தையில் இருந்து வெளியேறுவதாகவும், மின்சாரச் சேவைகளை நிறுத்துவதாகவும் தெரிவித்துள்ளது. மின்சார சந்தை நிலையற்ற சூழ்நிலையில் உள்ளதால் செயல்பாடுகளைத் தொடர்வது மிகவும் கடினம்.

5 வயது சிறுமி நீச்சல் குளத்தில் மூழ்கி மரணம்!

அடுத்த சில நாட்களுக்குள் எங்கள் வாடிக்கையாளர்கள், எங்களிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பெறுவார்கள். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் மின்சார விநியோகத்தில் எந்த இடையூறும் இருக்காது என்று நாங்கள் உறுதியளிக்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிறுவனம் தனது சேவைகளை நாளையுடன் (21/10/2021) நிறுத்தத் திட்டமிட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்குகளை எஸ்பி குழுமத்திற்கு (SP Group) மாற்றுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் மீண்டும் அதிகரித்த கொரோனா பாதிப்பு!

உலகளாவிய மொத்த எரிவாயு விலை அதிகரிப்பைத் தொடர்ந்து, கடந்த வாரம் iSwitch, Ohm Energy ஆகிய இரண்டு நிறுவனங்களும் மின்சார சேவை தொடர்பான செயல்பாடுகளை நிறுத்துவதாக அறிவித்திருந்தனர். இந்த இரண்டு நிறுவனங்களும் சிங்கப்பூர் 12 சில்லறை விற்பனையாளர்களிடையே பொது மின்சாரச் சந்தைத் திட்டத்தின் கீழ் இருந்தன. இதன் கீழ் நுகர்வோர் எஸ்பி குழுமத்திடமிருந்து நெறிப்படுத்தப்பட்ட கட்டணத்தில் மின்சாரம் வாங்கலாம் அல்லது மின்சார சில்லறை விற்பனையாளர்களிடமிருந்து தங்கள் தேவைகளுக்கு ஏற்ற விலை திட்டத்தில் வாங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூர் எரிசக்திச் சந்தை ஆணையம் (Singapore’s Energy Market Authority- ‘EMA’) கூறுகையில், “நாட்டின் எரிசக்தி விநியோகங்களைப் பாதுகாப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தேவைப்பட்டால் மின்சாரத்தை உற்பத்தி செய்ய மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு காத்திருப்பு எரிபொருள் வசதிகளை அமைப்பது இதில் அடங்கும்” எனத் தெரிவித்துள்ளது.

நியூசிலாந்து, சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் காணொளியில் சந்திப்பு!

சிங்கப்பூரில் இதுவரை மின்சார சேவைகளை நிறுத்துவதாக மூன்று நிறுவனங்கள் அறிவித்துள்ளனர். இதனால் அந்நிறுவனங்கள் சார்ந்துள்ள மற்ற நிறுவனங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், தொழிலாளர்களின் வாழ்க்கை கேள்வி குறியாகி உள்ளதாகக் கூறப்படுகிறது.