சிங்கப்பூரில் மீண்டும் அதிகரித்த கொரோனா பாதிப்பு!

Photo: Ooi Boon Keong/TODAY)

சிங்கப்பூரில் கொரோனா தடுப்பு பணிகள் ஒருபுறம் நடந்துக் கொண்டிருக்க மற்றொரு புறம் சர்வதேச நாடுகளுக்கான விமான போக்குவரத்தை சிங்கப்பூர் அரசு படிப்படியாகத் தொடங்கி வருகிறது. இந்த நிலையில், சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் தினசரி எண்ணிக்கை ஏற்றம், இறக்கத்துடன் பதிவாகி வருகிறது.

நியூசிலாந்து, சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் காணொளியில் சந்திப்பு!

கொரோனா நிலவரம் குறித்து சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று (19/10/2021) வெளியிட்டிருந்த அறிவிப்பில், “சிங்கப்பூரில் நேற்று (19/10/2021) மதியம் நிலவரப்படி, புதிதாக 3,994 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இதில் உள்ளூர் அளவில் 3,981 பேருக்கு நோய்த்தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 3,480 பேருக்கு சமூக அளவிலும், 501 புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கும், 13 வெளிநாட்டுக்கு பயணிகளுக்கும் கொரோனா பாதிப்பு உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இதனால் சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,54,725 ஆக அதிகரித்துள்ளது.

சிங்கப்பூரில் பணிப்பெண்களின் தேவை அதிகரிப்பு – முதலாளிகள் விண்ணப்பிக்கலாம்!

கொரோனா பாதிப்பால் மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 246 ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,738 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதில், 338 பேருக்கு ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 71 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனைகளில் ஐ.சி.யூ.வில் சிகிச்சைப் பெற்று வருகின்றன.” இவ்வாறு சுகாதாரத்துறை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.