சிங்கப்பூரில் பணிப்பெண்களின் தேவை அதிகரிப்பு – முதலாளிகள் விண்ணப்பிக்கலாம்!

Photo: MSIG Singapore

வருகின்ற நவம்பர் 1ம் தேதி முதல், முழுமையாக கோவிட் 19 தடுப்பூசி போட்டுக் கொண்ட புதிய பணிப்பெண்களை வேலைக்கு எடுக்கலாம் என்று மனிதவள துணை அமைச்சர் கான்சியோ ஹுவாங் தெரிவித்துள்ளார்.

இந்த மாதம் 15ம் தேதியிலிருந்து இதற்கான விண்ணப்பங்கள் செயல்பட ஆரம்பமாகிவிட்டது.

வெளிநாட்டு வீட்டுப் பணிப்பெண்களுக்கு அனுமதி – இந்தியாவிற்கும் வழிவகை செய்யும் திட்டம்

இதுவரை அதிக விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும், அதில் சில முதலாளிகளின்  பணிப்பெண்களை வேலைக்கு எடுப்பதற்கான விண்ணப்பங்களுக்கு அனுமதி கிடைப்பது கடினம் என்றார் அவர்.

இவ்வாறு அனுமதி கிடைக்காதவர்கள் அடுத்த வாரம் விண்ணப்பிகலாம் என்றார். மேலும் மிக அவசரமாக பணிப்பெண்கள் தேவையுள்ளவர்கள், சிங்கப்பூர் வேலைவாய்ப்பு முகவைகள் சங்கம் நடத்தும் வர்த்தக திட்டம் மூலம் விண்ணப்பம் செய்யலாம்.

அதாவது பணிப்பெண்களுக்கான வேலைவாய்ப்பு விண்ணப்பங்கள் அதிகளவில் வந்தாலும், குடும்பங்களின் பராமரிப்பு தேவையைப் பொருத்தும், சுற்றுச்சூழலுக்கான பொது சுகாதாரக் காரணங்களைக் கருத்தில் கொண்டுமே அரசு அவர்களுக்கான அனுமதியை அளிக்கும் என தெரிவித்தார்.

சிங்கப்பூரில் உள்ள பெரும்பாலான குடும்பங்களின் இல்லங்களுக்கு, வெளிநாட்டு பணிப்பெண்கள் அதிகம் தேவைப்படுவதால், 4 மாதங்களுக்கு முன்பே இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது.

இதனால் கடந்த ஜூலை மாதத்திலிருந்தே, இந்தோனிசியா மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் இருந்து பல பணிப்பெண்கள் சிங்கப்பூரில் வேலைசெய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வேலைக்கு வரும் பணிப்பெண்கள் கோவிட்-19 தடுப்பூசி போடவில்லை என்றால், சிங்கப்பூருக்குள் வந்த 2 மாதகால அவகாசத்திற்குள் கோவிட்-19 தடுப்பூசி கண்டிப்பாக போட்டுக் கொள்ள வேண்டும்.

வேலைக்காக சிங்கப்பூருக்குள் வரும் பணிப்பெண்கள் மீது, தீவிரமான பாதுகாப்பு நடைமுறை செயல்பாடுகளை பின்பற்றிய பிறகே அனுமதிகப்படுவார்கள் என்பது குறப்பிடத்தக்கது.

சிங்கப்பூரில் அதிகமான பணிப்பெண்களுக்கான தேவைகள் இருப்பதால், ஏராளமான முதலாளிகள் பணிப்பெண்கள் சிங்கப்பூருக்குள் வரும் அனுமதிக்காக விண்ணப்பிக்கின்றனர்.

சிங்கப்பூரின் கோவிட்-19 தாெற்றுப்பரவல் சூழ்நிலையை சீராக எவ்வித இடையூறுமின்றி பராமரித்து வருவது போல், பணிப்பெண்களுக்கான அனுமதி வழங்குவதிலும் மனிதவள அமைச்சு சிறப்பாக செயல்படுமென்று திரு. கான்சியோ ஹுவாங் தெரிவித்தார்.

தீபாவளியையொட்டி, கடை வீதிகளில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க சிங்கப்பூர் அரசு நடவடிக்கை!