வாகன உரிமைச் சான்றிதழ் விலை உயர்வு!

Photo: TODAY

 

சிங்கப்பூரில் கொரோனா நோய்த்தொற்று சற்று குறைந்துள்ள நிலையில், பொதுமக்கள் மற்றும் வணிகர்கள், தொழிலாளர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு தளர்வுகளைப் படிப்படியாக அறிவித்து வருகிறது சுகாதாரத்துறை அமைச்சகம். அதேசமயம், பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே செல்லும் போது, கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்; பொது இடங்களில் சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும்; கைகளை அடிக்கடி கிருமிநாசினி (அல்லது) சோப்பு கொண்டு கழுவ வேண்டும் போன்ற அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

தளர்வுகள் காரணமாக வர்த்தக நிறுவனங்கள் வழக்கம்போல் செயல்படத் தொடங்கியுள்ளன. சரக்கு இறக்குமதி, ஏற்றுமதி தொடர்ந்து நடைபெற்று வருவதால், சிங்கப்பூர் பொருளாதாரம் கணித்ததை விட அதிகாரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“சிங்கப்பூர் மக்கள் ஆப்கானிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம்”- வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்!

இந்த நிலையில், நேற்று (18/08/2021) வெளிவந்த டெண்டரில் வாகன உரிமைச் சான்றிதழ் (Certificates Of Entitlement- ‘COE’) விலைகள் பெரும்பாலும் உயர்ந்துள்ளன. மோட்டார் சைக்கிள்களுக்கான பிரீமியம் (Motorcycle Premium) எப்போதும் இல்லாத அளவுக்கு 9,500 சிங்கப்பூர் டாலரை எட்டியது.

1,600cc மற்றும் 130bhp வரை கார்களுக்கான சிஓஇ (COE) கட்டணம் இரண்டு வாரங்களுக்கு முன்பு 45,189 சிங்கப்பூர் டாலராக இருந்த நிலையில், தற்போது சற்று உயர்ந்து 45,689 சிங்கப்பூர் டாலரில் முடிந்தது. 1,600cc அல்லது 130bhp- க்கு மேல் உள்ள கார்களுக்கான பிரீமியம் (Premium For Cars) 61,001 சிங்கப்பூர் டாலரில் முடிவடைந்தது. இது முன்பு 56,001 சிங்கப்பூர் டாலராக இருந்தது.

மோட்டார் சைக்கிள்களைத் தவிர வேறு எந்த வாகன வகைகளுக்கும் பயன்படுத்தக்கூடிய ஓப்பன் சிஓஇ, பெரிய கார்களுக்கான (Bigger Cars) பிரத்தியேகமாக முடிவடையும் 59,599 சிங்கப்பூர் டாலரில் இருந்து 64,901 சிங்கப்பூர் டாலராக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பால் 64 வயது முதியவர் உயிரிழப்பு!

பெரிய கார்களுக்கான சிஓஇ- க்களின் (COEs) அதிகரிப்பு, கார்களுக்கான பிரீமியங்களின் (Premiums) அதிகரிப்பு முக்கிய சந்தையில் பலவீனத்தைக் குறிக்கிறது.

இது குறித்து பன்முக மோட்டார் குழுமத் தலைவர் நியோ நாம் ஹெங் கூறுகையில், “சரக்கு வாகனங்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு குறைந்த போதும், அதன் சான்றிதழ் எண்ணிக்கை எதிர்பாராவிதமாக 6% குறைந்து 40,010 சிங்கப்பூர் டாலரானது. நோய்த்தொற்றால் தற்போது நிலவி வரும் பொருளாதார நிச்சயமற்றத் தன்மையினால், வாடிக்கையாளர்கள் பொதுவாகத் தயக்கம் காட்டுகிறார்கள். பெட்ரோலுக்கு பதிலாக டீசல் பயன்படுத்தும் வாகனங்களை நிறுவனங்கள் விரும்புகின்றன” என்றார்.

ஹூண்டாய் (Hyundai) அதிகாரப்பூர்வ வெளியீட்டுக்கு முன்பே 50 ஐயோனிக் (50Ioniq) 5 எலெக்ட்ரிக் கார்களை (5 Electric Cars) விற்பனை செய்துள்ளது.