சிங்கப்பூரில் கட்டுமானத் துறையில் வளர்ச்சியை ஏற்படுத்தும் பொதுத்துறை திட்டங்கள்

construction sector recover projects
(Photo: TODAY)

சிங்கப்பூரின் கட்டுமான தேவை, இந்த 2021ஆம் ஆண்டில் மிதமான அளவில் வளர்ச்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது பெரும்பாலும் பொதுத்துறை கட்டுமான தேவை அதிகரிப்பால் ஏற்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு பல பெரிய உள்கட்டமைப்பு திட்டங்கள் இருப்பதாக கட்டிடம் மற்றும் கட்டுமான ஆணையம் (BCA) திங்களன்று (ஜனவரி 18) தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரின் ஏற்றுமதி கடந்த டிசம்பர் மாதத்தில் 6.8% உயர்வு!

இந்த ஆண்டில் சுமார் S$23 பில்லியனிலிருந்து S$28 பில்லியன் மதிப்புள்ள கட்டுமான ஒப்பந்தங்கள் வழங்கப்படும் என்று BCA கணித்துள்ளது.

இது 2020ஆம் ஆண்டில் மதிப்பிடப்பட்ட S$21.3 பில்லியனில் இருந்து அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ கூறுகையில், இந்த ஆண்டு ஒட்டுமொத்த கட்டுமானத் தேவையில் சுமார் 65 சதவீதம் அல்லது S$15 பில்லியனுக்கும் S$18 பில்லியனுக்கும் இடையில் அரசாங்கத்தின் பங்களிப்பு இருக்கும் என்றார்.

2020ஆம் ஆண்டின் S$13.2 பில்லியன் மதிப்புள்ள பொதுத்துறை திட்டங்களை விட அது அதிகம்.

இதன் காரணமாக இந்த ஆண்டின் கட்டுமான துறை வளர்ச்சியை காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விமான, கடல்சார் துறைகளில் உள்ள 37,000 ஊழியர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடக்கம்!