ரொக்கமில்லா பணப் பரிவர்த்தனை… அதிகமாக செலவழிக்கும் இளைஞர்கள்!

File Photo

 

உலகம் முழுவதும் அனைத்து நாடுகளிலும், அனைத்து துறைகளிலும் தொழில்நுட்ப வளர்ச்சி நொடிக்கு நொடிக்கு வளர்ந்து வருகிறது. இது நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்கிறது. மற்றொரு புறம் வளர்ச்சியால் சில தீமைகளும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

குறிப்பாக, தொழில்நுட்ப வளர்ச்சியில் தகவல் தொழில்நுட்பத்துறை (Information Technology) அதிவேகமாக வளர்ந்து வருகிறது. இதன் மூலம் மிக விரைவான அரசு மற்றும் தனியார் சேவைகளை பொதுமக்களுக்கு கிடைக்கின்றன. அதில் ஒன்று தான் வங்கிச் சேவைகள். இன்றைய காலகட்டத்தில் ஒருவர் தனது வங்கி கணக்கில் இருந்து மற்றொருவருக்கு எளிதாக பணத்தை அனுப்பி முடியும். மேலும், சாதாரண பெட்டி கடைகள் முதல் நட்சத்திர ஹோட்டல் வரை ரொக்கமில்லாத ஆன்லைன் பணப் பரிவர்த்தனை முறையை பொதுமக்கள் மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக, தேநீர் கடைகளில் கூட பொதுமக்கள் தங்களது கட்டணத்தை ரொக்கமில்லா பணப் பரிவர்த்தனையில் மேற்கொண்டு வருகின்றனர்.

பணம் தேவைப்படும் போது தங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள ஏ.டி.எம் மையத்திற்கு (ATM Center) சென்று நிமிடத்தில் பணத்தை எடுத்துக் கொள்ளும் வகையில் வங்கி சேவைகளில் மிகப்பெரிய வளர்ச்சிக் கண்டுள்ளது. வங்கிக் கணக்கு வைத்திருப்போர் அனைவரும் ஏ.டி.எம். அட்டைகளை சம்பந்த வங்கிகள் தங்களது வங்கியில் சேமிப்பு கணக்கைத் தொடங்கிய வாடிக்கையாளர்களுக்கு ஏ.டி.எம். அட்டைகளை வழங்குகின்றன.

ரொக்கமில்லா பணப் பரிவர்த்தனையில் (Online Money Transaction) கிரெடிட் மாற்றம் டெபிட் அட்டைகள் (Credit and Debit Cards), இ-வாலட்ஸ் (e-wallets), பேவேவ் (PayWave), பேநவ் (PayNow) உள்ளிட்டவை அடங்கும்.

பேரங்காடிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்த வாடிக்கையாளர்கள்!

இந்த நிலையில், சிங்கப்பூரில் ரொக்கமில்லா பணப் பரிவர்த்தனை முறையால் (Contactless Payment) இளைஞர்கள் அளவுக்கு அதிகமாக செலவழித்து வருவதாக ஆய்வுகள் மற்றும் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றன. தற்போது கொரோனா பரவல் காரணமாக, ரொக்கமில்லா கட்டண முறை மேற்கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

18 வயதுக்கும் 35 வயதுக்கும் இடைப்பட்ட வாடிக்கையாளர்கள் பலர் ரொக்கமில்லா பணப் பரிவர்த்தனைகளுக்கு மாறியிருப்பதாக டிபிஎஸ் வங்கி (DBS Bank) கூறியுள்ளது.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தின் வர்த்தகப் பள்ளி (School of Business, National University of Singapore) இணை பேராசிரியர் ஆங் சுவீ ஹூன் கூறுகையில், “ரொக்கமில்லா பணப் பரிவர்த்தனை முறை மற்றும் கட்டண முறை மிதமிஞ்சிய அளவுக்கு செலவழிப்பதை ஊக்குவிக்கக்கூடும். ரொக்கமில்லா கட்டண முறை மூலம் செலவழிக்கும் போது ரொக்கத்தைப் பார்க்க முடியாததால், பயனீட்டாளர் தங்களது செலவினதைக் குறைத்து மதிப்பிட்டு விடுகின்றனர்” என்று தெரிவித்தார்.

தற்போது, கூகுள் பே (Google Pay), அமேசான் பே (Amazon Pay), பேபால் (PayPal), ஃபிரீசார்ஜ் (Freecharge), பேயூமணி (PayUMoney), ஃபோன்பே (PhonePe), பேட்டியம் (Paytm) ஆப்கள் மற்றும் வங்கிகளின் ஆப்கள் (Banks Apps) மூலம் உலக மக்கள் அதிகளவில் ரொக்கமில்லா பணப் பரிவர்த்தனை முறையை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் சிங்கப்பூரில் ஆன்லைன் மூலம் நடைபெறும் பண மோசடிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.