பேரங்காடிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்த வாடிக்கையாளர்கள்!

Photo: Yong Jun Yuan/TODAY

 

சிங்கப்பூரில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அனைத்து பகுதிகளிலும் உயர் விழிப்புநிலை இரண்டாம் கட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அரசின் கொரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றாத உணவகங்கள் (Restaurants), உணவு மற்றும் பானக் கடைகளின் (Food & Beverages Shops) உரிமங்களை அதிகாரிகள் ரத்து செய்துள்ளனர். அதேபோல், பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்; பொது இடங்களில் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்; கைகளை அடிக்கடி சோப்பு (அல்லது) கிருமிநாசினியைக் கொண்டு கழுவ வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதனிடையே, கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ள பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. இதனால் அனைத்து பகுதிகளிலும் தடுப்பூசிப் போடும் நிலையங்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, தடுப்பூசிப் போடுவதில் முதியவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. முதியவர்கள் தடுப்பூசிக்கு முன்பதிவு செய்ய தேவையில்லை; நடக்க முடியாத முதியவர்களுக்கு அவர்களின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசிப் போடுவதற்கு சுகாதாரத்துறை சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

இந்த நிலையில், வார இறுதி நாளான நேற்று (24/07/2021) அன்று காலை முதலே மேற்கில் புக்கிட் பஞ்சாங் (Bukit Panjang) மற்றும் ஜுரோங் (Jurong) முதல் கிழக்கில் டாம்பைன்ஸ் ((Tampines in the East) வரை ஃபேர்பிரைஸ் விற்பனை நிலையங்களுக்குள் ((FairPrice outlets) மளிகை பொருட்கள், பிஸ்கட்கள் உள்ளிட்ட உணவு மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இவர்கள், பேரங்காடிகளுக்குள் (Supermarket) நுழைய சுமார் 20 நிமிடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.

முகக்கவசம் அணிய தவறிய பெண்ணுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து!

இருப்பினும், பேரங்காடிக்குள் நுழைந்தவுடன் கூட்டத்திற்கு மத்தியில் பொருட்களை எடுப்பது பலருக்கும் சவாலாக இருந்தது. அதைத் தொடர்ந்து, எடுக்கும் பொருட்களுக்கு பணத்தைச் செலுத்தும் கவுன்டரிலும் வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் நிற்க வேண்டியிருந்தது.

ஜூரோங் மீன்பிடி துறைமுகத்தில் (Jurong Fishery Port) ஏற்பட்ட கொரோனா தொற்று பரவல் காரணமாக, பல ஈரச்சந்தைகள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். ஏனெனில், சந்தைகளில் பல மீன் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், கடலுணவு உள்ளிட்ட உணவுப் பொருட்களை வாங்க பேரங்காடிகளில் மக்கள் குவிந்ததாக, வாடிக்கையாளர் ஒருவர் தெரிவித்தார்.

மேலும், அருகிலுள்ள ஈரச்சந்தைகள் (Wet markets) திறந்திருக்கின்றனவா என்பது பற்றி உறுதியாக தெரியவில்லை; அதைத் தெரிந்துக் கொள்வதற்கும் சிரமமாக உள்ளதாக பொதுமக்கள் கூறினர்.

சிங்கப்பூரில் கிருமித்தொற்று காரணமாக பெண் மரணம்.!

79 வயதான நபர் ஒருவர் கூறுகையில், “இவ்வளவு நீண்ட வரிசையை நான் பார்த்தது இதுவே முதல் முறை.. இறுதியில்,பேரங்காடிக்குள் நுழைவதற்கு 15 நிமிடங்கள் முதல் 20 நிமிடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது” என்றார்.

இருப்பினும் சில பேரங்காடிகளில் மட்டும் தான் வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த ஒரு சில வாடிக்கையாளர்கள் கூறுகின்றன.