சிங்கப்பூரில் கிருமித்தொற்று காரணமாக பெண் மரணம்.!

Singapore report covid death
Pic: Google Maps

கொரோனா கிருமித்தொற்று காரணமாக 83 வயது சிங்கப்பூர் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் நேற்று (ஜூலை 24) தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் உள்ள புக்கிட் மேரா வியூ 121 (Bukit Merah View) கிருமித்தொற்று குழுமத்துடன் அந்த பெண் தொடர்புடையவர். அவர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர் இல்லை என சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

“தடுப்பூசிப் போட்டுக்கொள்ளுங்கள்; தாமதிக்க வேண்டாம்”- பிரதமர் லீ சியன் லூங் அறிவுறுத்தல்!

கிருமித்தொற்று காரணமாக மரணமடைந்த அந்த பெண்ணுக்கு கடந்த மாதம் 16ம் தேதி தொற்று அறிகுறி தென்பட்டது. ஜூன் 18ம் தேதி தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனையில் சேர்க்கப்படும் வரை அவர் உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ளவில்லை.

உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் அந்தப் பெண்ணுக்கு இருந்ததாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் COVID-19 கிருமித்தொற்று காரணமாக ஏற்பட்ட இறப்புகளின் மொத்த எண்ணிக்கை 37ஆக உயர்ந்துள்ளது.

சிங்கப்பூர் கடற்பகுதிகளில் அதிகரித்துவரும் கொள்ளை சம்பவங்கள்!