சிங்கப்பூர் கடற்பகுதிகளில் அதிகரித்துவரும் கொள்ளை சம்பவங்கள்!

pirates coastal areas robbery increases weapons
Pic: AFP

சிங்கப்பூரில் நீரிணையில் ஆயுதம் ஏந்தி கொள்ளையடிக்கும் சம்பவங்கள் இவ்வாண்டில் அதிகரித்து வருகிறது.

கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை இது போன்ற 20 சம்பவங்கள் பதிவாகி உள்ளது. கடந்த ஆண்டு பதிவாகிய குற்றங்களை விட இது நான்கு மடங்கு அதிகம் ஆகும்.

பயணங்களை மீண்டும் தொடங்கும் திட்டம் எப்போது சாத்தியமாகும்.? – அமைச்சர் தகவல்.!

ஆசிய கடல் பகுதியில் ஆயுதம் ஏந்தி கொள்ளையடிக்கும் குற்றங்கள் குறைந்துள்ள நிலையில், சிங்கப்பூர் நீரிணையில் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆசிய கடற்பகுதியை பொறுத்தவரை கடந்த ஆண்டு 57 குற்றங்கள் பதிவாகின, அதுவே இந்த ஆண்டு 37 சம்பவங்கள் மட்டுமே பதிவாகி உள்ளது. இது கடந்த ஆண்டை விட 35 சதவீதம் குறைவு.

ஆசிய கடற்பகுதிகளில் பதிவான ஆயுதம் ஏந்தி கொள்ளையடிக்கும் குற்றங்களில் பாதிக்கு மேல் சிங்கப்பூர் நீரிணையில் நிகழ்ந்துள்ளதாக
வட்டார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் தகவல் பகிர்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சிங்கப்பூர் நீரிணையில் நிகழ்த்த 20 ஆயுதம் ஏந்திக் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் இந்தோனேஷியா கடற்பகுதியில் நிகழ்ந்தவை ஆகும். அங்குள்ள பிந்தான் தீவில் உள்ள தஞ்சோங் பெர்காமுக்கு அருகில் 15 கொள்ளை சம்பவங்கள் நிகழ்துள்ளன. அதே, பகுதியில் 5 கப்பல்கள் தாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு இந்திய ஊழியர்களை சிங்கப்பூருக்குள் அனுமதிக்க கோரிக்கை மனு