பயணங்களை மீண்டும் தொடங்கும் திட்டம் எப்போது சாத்தியமாகும்.? – அமைச்சர் தகவல்.!

singapore air-ticket-prices-up-departing-flights
Pic: File/Reuters

சிங்கப்பூரில் பயணத்துறையை மீண்டும் தொடங்குவதற்கான வருங்கால திட்டத்தை அடுத்த சில மாதங்களில் எதிர்பார்க்கலாம் என வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங் (Gan Kim Yong) தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்கும் வேளையில், அவர்கள் தனித்துவமான அனுபவங்களையும் பெற முடியும் என்றும், குழுவாகச் சேர்ந்து பாதுகாப்பாகப் பயணங்களை மேற்கொள்ளும் சாத்தியம் இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள நிறுவனங்கள்… வர்த்தக சங்கங்கள் கோரிக்கை

சிங்கப்பூரில் தற்போது தடுப்பூசி போட்டுக்கொள்வோரின் விகிதம் அதிகரித்து வருகிறது என்றும், கிருமித்தொற்று பரிசோதனை மேற்கொள்வதற்கும் தொடர்புத் தடங்களைக் கண்டறிவதற்கும் தேவையான ஆற்றல் இருக்கிறது என்றும் அமைச்சர் கான் கிம் யோங் கூறினார்.

இந்த ஆண்டு இறுதிக்குள் பயணம் செய்யும் வாய்ப்பு ஏற்படலாம் என்றும், பயன்மிக்க பாதுகாப்பு அம்சங்களுடன் உலகத்துடன் மீண்டும் இணையலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், COVID-19 நோய்ப்பரவலுடன் வாழவும், எல்லைகளைத் திறக்கவும் அதிகமான நாடுகள் தயாராகி வருகிறது என்றும், சிங்கப்பூரிலும் மற்றும் உலகிலும் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் விகிதம் அதிகமாகும் எனவும் அமைச்சர் கான் கிம் யோங் தெரிவித்தார்.

தென்கிழக்கு ஆசிய சந்தைகளில் முன்னணியில் உள்ள சிங்கப்பூர் வங்கிகள்!