கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள நிறுவனங்கள்… வர்த்தக சங்கங்கள் கோரிக்கை

(photo: Joshua Lee)

சிங்கப்பூரில் கொவிட்-19 தொற்று சமூக அளவில் அதிகரித்து வருவதால், கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இதனால் பாதிக்கப்படும் நிறுவனங்களுக்கு ஆதரவாக வர்த்தக சங்கங்கள் கோரிக்கைகள் விடுத்துள்ளன.

கூடுதல் வாடகைக்கழிவு, சம்பள ஆதரவு, கடன் செலுத்த கூடுதல் அவகாசம் போன்றவற்றுக்கான தேவையை அவை சுட்டிக்காட்டுகின்றன.

ஆபத்தான லாரி பயணங்கள், வெளிநாட்டு ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மாற்று வழிகள்..!

முன்னணி தொழில் வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த மூன்று அம்ச உதவி கோரிக்கை காணப்பட்டது.

சில்லறை வர்த்தகம், உணவு பானம் மற்றும் சேவைகள் ஆகிய துறைகளின் நீடித்த நிலைத்தன்மையை உறுதி செய்ய இது போன்ற உதவிகள் தேவை என கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

வர்த்தகத்தில் ஏற்படும் பாதிப்புகளுக்கு ஏற்ப வாடகை கழிவுகளை கட்டட உரிமையாளர்கள் வழங்க வேண்டும் என கூட்டமைப்பு கோரிக்கையை எழுப்பி உள்ளது.

பல்வேறு வேலைகள் சிங்கப்பூரர்களுக்கு சாத்தியமாகக்கூடிய வகையில், வர்த்தகங்களுக்கு உதவ அரசாங்கம் சம்பள ஆதரவை வழங்கவும் கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது.

மேலும், வங்கிகள் வழங்கியுள்ள கடன்களின் அசலை திருப்பி செலுத்துவதற்கான காலக்கெடு 2022 ஜூன் வரை நீடிக்க கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்டக் கட்டுப்பாடுகள் ஆகஸ்ட் 18 வரை நடப்பில் இருக்கும் என்ற அறிவிப்பு வந்த நிலையில் இந்த கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

வாடகை இடங்களில் தொழில் நடத்தும் முன்னணி வர்த்தகங்களில் பெரும்பான்மையினர் அவர்களின் கட்டட உரிமையாளர்களிடம் இருந்து இன்னும் போதுமான வாடகை கழிவு ஆதரவை பெறவில்லை, அதே வேளையில் பெரியதொரு வாடகை உதவி அரசாங்கத்திடம் இருந்து கிடைக்கிறது என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்களுக்கு கட்டாய விடுமுறை வழங்க வேண்டும் – மனிதவள அமைச்சகம்.!