வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு இந்திய ஊழியர்களை சிங்கப்பூருக்குள் அனுமதிக்க கோரிக்கை மனு

Roslan Rahman/AFP

இந்திய அரசு வழங்கிய தடுப்பூசி சான்றிதழ்கள் உடைய, செல்லுபடியாகும் வேலை அனுமதி விசா கொண்ட இந்திய பயணிகள் மற்றும் அவர்களை சார்ந்தவர்கள், வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் பிற அனுமதி உடையவர்களுக்கு நுழைவு அனுமதி வழங்கவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்திய பயணிகளை பல வழிகளில் கட்டுப்பாடுகள் கடுமையாக பாதித்துள்ள நிலையில், எல்லை கட்டுப்பாடுகளை சிங்கப்பூர் மேலும் கடுமையாக்கியுள்ளது.

பயணங்களை மீண்டும் தொடங்கும் திட்டம் எப்போது சாத்தியமாகும்.? – அமைச்சர் தகவல்.!

வாழ்வாதாரம் பாதிப்பு

இந்தியாவில் இருந்து பணியாற்றுவது சிங்கப்பூர் அடிப்படையிலான நிறுவனங்களால் அனுமதிக்கப்படவில்லை. இது இந்தியர்களின் வாழ்வாதாரத்தை நேரடியாக பாதிக்கிறது. இது பலரின் வாழ்க்கையையும் குடும்பத்தையும் எதிர்மறையாக பாதிக்கிறது.

வேலை அனுமதி புதுப்பித்தல் அல்லது வேலைவாய்ப்பு அனுமதி மற்றும் பிற அனுமதிகள் ஆபத்தில் உள்ளன, சில சந்தர்ப்பங்களில் அவை ரத்து செய்யப்படுகின்றன. மாணவர்கள் கல்வியை மீண்டும் தொடங்க முடியவில்லை மற்றும் அவர்களின் எதிர்காலமும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது.

குடும்ப உறவுகள்

குடும்ப உறவுகள் ஒரு வருடத்திற்கும் மேலாக தங்கள் அன்பிற்குரியவர்களை பிரிந்துள்ளன, இது அவர்களின் மன ஆரோக்கியத்தை மிகவும் பாதித்துள்ளது.

ஒட்டுமொத்தமாக, இந்த எல்லை மூடல் பொதுமக்களை பெருமளவில் பாதித்துள்ளது, இதனால் தொற்றுநோயுடன் சேர்த்து கூடுதலாக இந்த கடினமான நிலைமையையும் எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

ஆபத்தான லாரி பயணங்கள், வெளிநாட்டு ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மாற்று வழிகள்..!

இந்தியாவில் நிலை முன்னேற்றம்

மறுபுறம், இந்தியாவில் நிலைமை நிறைய முன்னேற்றம் அடைந்துள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேலும், அங்கு தடுப்பூசி துரிதமாக போடப்பட்டு வருவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என இந்தியர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

சிங்கப்பூரின் நெறிமுறைகளை மதிக்கிறோம்

சிங்கப்பூரின் நிலைமையை நாங்கள் நன்கு புரிந்துகொண்டு அவற்றின் நெறிமுறைகளை மதிப்பதாகவும், எங்களின் நிலைமையை அவர்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டுள்ள இந்தியர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

நிலைமை மீண்டும் சிறப்பாக வரும் வரை, குறைந்தது சில சிக்கல்களை தீர்க்க முடியும் என்பதே சிங்கப்பூரில் பணிபுரியும் மற்றும் படிக்கும் விசா வைத்துள்ள, எல்லை கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியர்களின் வேண்டுகோளாக உள்ளது.

இதுவரை 3,000க்கும் மேற்பட்டோர் அந்த கோரிக்கை மனுவில் கையளித்திட்டுள்ளனர்.