DBS & POSB இணைய சேவை முடக்கம்: இயல்பு நிலைக்குத் திரும்பியது!

(Photo: DBS)

DBS மற்றும் POSB டிஜிட்டல் பேங்கிங் சேவைகளில் வாடிக்கையாளர்கள் கடந்த இரண்டு நாட்களாக இடையூறுகளை சந்தித்து வந்தனர்.

தற்போது அதன் சேவைகள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாக DBS தனது சமீபத்திய செய்தியில் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் பயணம் செய்ய விரும்பும் சிங்கப்பூரர், நிரந்தரவாசி அல்லாதோருக்கு..

அனைத்து சேவைகளும் சீராக இயங்குவதை உறுதிசெய்ய சூழலை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம் என்று நேற்று (நவம்பர் 24) இரவு 11 மணிக்குப் பிறகு பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் DBS தெரிவித்துள்ளது.

வியாழன் காலை நிலவரப்படி, Downdetector என்ற இணையதளத்தில் DBS மற்றும் POSB தடங்கல் குறித்த புகார்கள் குறைந்துள்ளது, இருப்பினும் காலை 9.40 மணிக்கு DBS தொடர்பாக 60க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவாகியுள்ளது.

DBSஇன் Facebook பக்கத்தில் கருத்து தெரிவிக்கும் சில வாடிக்கையாளர்கள் சேவைகள் கிடைக்கவில்லை என்று தொடர்ந்து புகாரளித்தனர், மேலும் சாதனங்களை மறுதொடக்கம் (restart) செய்யும்படி வங்கி அவர்களுக்கு அறிவுறுத்தியது.

“இது எங்கள் வாடிக்கையாளர்களில் பலரைப் பாதித்துள்ளது என்பதை நாங்கள் அறிவோம், மேலும் நிலைமையைத் சரிசெய்ய எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம். ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் வருந்துகிறோம்” என்று வங்கி நேற்று தெரிவித்திருந்தது.

சாங்கி ஈஸ்ட் பணித்தளத்தில் விபத்து: ரோலர் இயந்திரம் கவிழ்ந்ததில் இந்திய ஊழியர் மரணம்