சிங்கப்பூர் பயணம் செய்ய விரும்பும் சிங்கப்பூரர், நிரந்தரவாசி அல்லாதோருக்கு..

(Photo: TODAY)

சிங்கப்பூர் குடிமக்கள் அல்லது நிரந்தரவாசி அல்லாத, VTL சேவைகளில் பயணம் செய்ய விரும்பும் வாடிக்கையாளர்கள், தங்கள் விசா விண்ணப்பத்திற்கு முன்னதாகவே Vaccinated travel pass – VTP பயண அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த VTP விண்ணப்பங்கள் சிங்கப்பூருக்குள் நுழைவதற்கு திட்டமிட்டுள்ள தேதிக்கு ஏழு முதல் 60 காலண்டர் நாட்களுக்குள் செய்யப்பட வேண்டும்.

சென்னை To சிங்கப்பூர் தினசரி VTL விமானங்களுக்கான முன்பதிவு தொடக்கம் – “குடும்பங்களை ஒன்றிணைக்கும் அனுமதி” – SIA

சிங்கப்பூருக்கு VTL அல்லாத விமானங்களில் பயணிக்கும் பயணிகள் நடைமுறையில் உள்ள பொது சுகாதார நடைமுறை கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

இந்தியாவில் இருந்து குறுகிய கால வருகையாளர்கள் மற்றும் நீண்ட கால அனுமதி வைத்திருப்பவர்களுக்கு VTP பயண அனுமதிக்கான விண்ணப்பங்கள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன.

SIA நிறுவனத்தின் குறைந்த கட்டண விமானமான Scoot, வரும் நவம்பர் 30 முதல் சிங்கப்பூர் மற்றும் ஹைதராபாத் இடையே வாரத்திற்கு நான்கு முறை VTL அல்லாத விமானங்களை இயக்க உள்ளது.

மேலும், அடுத்த மாதம் டிசம்பர் 2 முதல் சிங்கப்பூர் மற்றும் திருச்சி இடையே வாரத்திற்கு மூன்று முறை VTL அல்லாத விமானங்கள் இயக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

இந்த விமானங்களுக்கு தற்போது முன்பதிவுக்குத் தொடங்கப்பட்டுள்ளன.

திருச்சி, பெங்களூரு, ஹைதராபாத், கொச்சி, கொல்கத்தாவிலிருந்து சிங்கப்பூர் செல்ல VTL அல்லாத விமானங்கள்!