திருச்சி, பெங்களூரு, ஹைதராபாத், கொச்சி, கொல்கத்தாவிலிருந்து சிங்கப்பூர் செல்ல VTL அல்லாத விமானங்கள்!

foreign life

அகமதாபாத், பெங்களூரு, ஹைதராபாத், கொச்சி மற்றும் கொல்கத்தாவிலிருந்து சிங்கப்பூருக்கு வரும் நவம்பர் 29 முதல் VTL அல்லாத விமானங்களை படிப்படியாக இயக்க உள்ளதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் SIA அறிவித்துள்ளது.

அதே நேரத்தில், SIA நிறுவனத்தின் குறைந்த கட்டண விமானமான Scoot, வரும் நவம்பர் 30 முதல் சிங்கப்பூர் மற்றும் ஹைதராபாத் இடையே வாரத்திற்கு நான்கு முறை VTL அல்லாத விமானங்களை இயக்க உள்ளது.

சென்னை To சிங்கப்பூர் தினசரி VTL விமானங்களுக்கான முன்பதிவு தொடக்கம் – “குடும்பங்களை ஒன்றிணைக்கும் அனுமதி” – SIA

மேலும், அடுத்த மாதம் டிசம்பர் 2 முதல் சிங்கப்பூர் மற்றும் திருச்சி இடையே வாரத்திற்கு மூன்று முறை VTL அல்லாத விமானங்கள் இயக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. இந்த விமானங்களுக்கு தற்போது முன்பதிவுக்குத் தொடங்கப்பட்டுள்ளன.

வாடிக்கையாளர்கள் தங்கள் பயணத்திற்கு முன்னர், VTL ஏற்பாட்டின் கீழ் பயணிக்கத் தகுதியுள்ளவர்கள் என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று SIA கூறியது.

முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தரவாசிகள், 12 வயது மற்றும் அதற்குக் குறைவான குழந்தைகள் VTLன் கீழ் சிங்கப்பூருக்குள் நுழைய பயண அனுமதிக்கு (VTP) விண்ணப்பிக்க வேண்டியதில்லை என்று சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் கூறியுள்ளது.

இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் வர தயாராகும் பயணிகள்: சுமார் 1,000க்கு மேற்பட்ட பயணிகளுக்கு அனுமதி