DBS வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி – சேமிப்பு கணக்கின் வட்டி விகிதம் அதிகரிப்பு

(Photo: DBS)

DBS வங்கி அதன் முதன்மையான மல்டிபிளையர் சேமிப்புக் கணக்கிற்கான வட்டி விகிதங்களை நேற்று (நவம்பர் 1) மீண்டும் உயர்த்தியது.

அதாவது அதிகபட்ச வட்டி விகிதம் 3.5 சதவீதத்தில் இருந்து ஆண்டுக்கு 4.1 சதவீதமாக உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

உரிமம் இல்லாமல் 2.2 மில்லியன் மாஸ்க் உற்பத்தி – நிறுவனத்திற்கு S$10,000 அபராதம்

சமீபத்தில், OCBC தனது 360 சேமிப்புக் கணக்கிற்கான வட்டி விகிதங்களை ஆண்டுக்கு 4.65 சதவீதமாக உயரத்தியது. அதனை தொடர்ந்து DBS இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

DBS மல்டிபிளையர் திட்டத்தில் வாடிக்கையாளர்கள் அவர்களின் கணக்கில் S$100,000 சேமிக்க வேண்டும், இவர்களுக்கு 4.1 சதவீதம் வரையிலான வட்டி விகிதங்களை வங்கி வழங்குகிறது.

மேலும், இந்த வட்டி விகிதங்கள் சம்பளம், செலவு மற்றும் பரிவர்த்தனைகள் ஆகியவற்றின் அடிப்படையில் வகைப்படுத்தப்படலாம் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

குஜராத் பாலம் இடிந்து விழுந்து 130க்கும் மேற்பட்டோர் மரணம்: இரங்கல் தெரிவித்த சிங்கப்பூர் பிரதமர் லீ