கோவையில் இருந்து சிங்கப்பூருக்கு நேரடி விமான சேவை – டிசம்பர் 29 முதல் தொடக்கம்!

SIA, Scoot
Scoot

கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு நேரடி விமான சேவை தொடங்க உள்ளது.

வரும் டிசம்பர் 29 முதல் Air bubble ஏற்பாட்டின் கீழ் இந்த நேரடி விமான சேவை தொடங்கும் என்று விமான நிலைய இயக்குநர் எஸ். செந்தில் வளவன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

மரத்தின் மீது மோதிய SBS பேருந்து: 6 பேர் மருத்துவமனையில் அனுமதி – ஓட்டுநர் சஸ்பெண்ட்

சிங்கப்பூர் பட்ஜெட் விமான நிறுவனமான “ஸ்கூட் ஏர்லைன்ஸ்” கோவை சர்வதேச விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூரில் உள்ள சாங்கி விமான நிலையத்திற்கு வாரத்திற்கு மூன்று விமானங்களை இயக்கும் என்று அவர் கூறினார்.

டிசம்பர் 29 முதல் இந்த விமானங்கள், கோவை விமான நிலையத்திற்கு இரவு 10.45 மணிக்கு வந்து சேரும், அதே போல இரவு 11.45 மணிக்கு சிங்கப்பூர் புறப்படும்.

கோயம்புத்தூர் மற்றும் சிங்கப்பூர் இடையே சிறப்பு ஏற்பாட்டிற்கு சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது என்று திரு வளவன் கூறினார்.

கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக வழக்கமான சர்வதேச விமானங்கள் இடைநிறுத்தப்பட்டிருப்பதால், விமானப் பயணத்தை அனுமதிக்க இரு நாடுகளுக்கு இடையே இந்த Air bubble விமான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

“குழந்தைகளை பிரிந்து வாடும் வெளிநாட்டு ஊழியர்கள்” – நானும் குழந்தை தான்.. அவர்களுக்கு பதில் அன்பளிப்பு வழங்குகிறேன்!