வெளிநாட்டில் இருந்து செல்லும் பயணிகளுக்கு தனிமை இல்லை – அறிவித்த நாடு!

வெளிநாட்டில் இருந்து செல்லும் பயணிகளுக்கு மார்ச் 7 முதல் இந்தோனேசியாவின் பாலி தீவுக்கு தனிமைப்படுத்தலின்றி நுழைய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனை அந்நாட்டின் கடல்சார் விவகாரங்கள் மற்றும் முதலீட்டுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் லுஹுத் பாண்டிஜைதன் தெரிவித்தார்.

Employment Pass அனுமதி புள்ளி முறையில் ஏதேனும் தந்திரம் செய்ய முயற்சித்தால் அதிக கடும் நடவடிக்கை…!

இந்தோனேசியாவின் கோவிட்-19 சூழலை கருத்தில் கொண்டு பாலிக்கு தனிமைப்படுத்தல் இல்லை என அரசாங்கம் முடிவு செய்துள்ளது என அவர் தெரிவித்தார்.

அங்கு கோவிட்-19 பாதிப்பு குறைந்துள்ளது என்றும், இறப்பு விகிதம் ஒப்பீட்டளவில் குறைவாகக் கருதப்படுகிறது எனவும் கூறப்பட்டுள்ளது.

அதற்கு முன்னதாக, மார்ச் 14 முதல் வெளிநாட்டினரை தனிமைப்படுத்தலின்றி பாலிக்குள் அனுமதிக்க அரசாங்கம் திட்டமிட்டது.

சிங்கப்பூரில் அனைத்து பொது இடங்களிலும் புகைப்பிடிக்க தடை – மீறினால் கடும் அபராதம்!