சிங்கப்பூரில் அனைத்து பொது இடங்களிலும் புகைப்பிடிக்க தடை – மீறினால் கடும் அபராதம்!

சிங்கப்பூரில் வருகின்ற ஜூலை 1, 2022 முதல் அதிகமான பொது இடங்களில் புகைபிடிப்பது தடைசெய்யப்படும் என்று நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் மூத்த அமைச்சர் எமி கோர் இன்று மார்ச் 7 தெரிவித்தார்.

ஜூலை 1 முதல், ஈஸ்ட் கோஸ்ட் பார்க் மற்றும் ஃபோர்ட் கேனிங் பார்க் (Fort Canning Park) போன்ற எஞ்சியிருக்கும் அனைத்து பொது பூங்காக்கள் மற்றும் கார்டன்களில் புகைபிடிப்பது தடைசெய்யப்படும்.

ஊழியர் பற்றாக்குறை… கட்டுமான, கடல் துறை Work permit ஊழியர்களின் நுழைவு நடைமுறை எளிமை! – செய்ய வேண்டியது என்ன?

செந்தோசாவில் உள்ள மூன்று கடற்கரைகள் உட்பட 10 பொழுதுபோக்கு கடற்கரைகளிலும் புகைபிடிப்பது தடைசெய்யப்படும் என்று கோர் அறிவித்தார்.

கூடுதலாக, Active, Beautiful, Clean (ABC) நீர் தளங்களிலும் புகைபிடிப்பது தடைசெய்யப்படும்.

இந்த மூன்று மாத ஆலோசனை காலம் ஜூலை முதல் தொங்கி செப்டம்பர் வரை நீடிக்கும். மேலும் தண்டனைக்குரிய கட்டாய சட்டம் அக்டோபர் 1, 2022 முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் S$200 அல்லது S$1,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.

இரத்தம் தோய்ந்த துண்டான கால் வீடியோ இணையத்தில் பரவல்… கண்டெடுக்கப்பட்ட சடலம் – என்ன நடந்தது?