இரத்தம் தோய்ந்த துண்டான கால் வீடியோ இணையத்தில் பரவல்… கண்டெடுக்கப்பட்ட சடலம் – என்ன நடந்தது?

Google MapsFacebook video screenshot

சிங்கப்பூர் வீதியில் இரத்தம் தோய்ந்த துண்டிக்கப்பட்ட கால் போன்று தோன்றும் காணொளி ஒன்று சமீபத்தில் இணையத்தில் வைரலாக பரவியது.

இந்த காணொளியானது ஃபேஸ்புக் குழுவில் பகிரப்பட்டது, ஆனால் அது பின்னர் நீக்கப்பட்டது.

இந்தியாவின் அனைத்து நகரங்களில் இருந்தும் சிங்கப்பூருக்கு தனிமை இல்லா சேவை!

இந்நிலையில், மார்ச் 4 அன்று Blk 37 Margaret Driveல் 31 வயதான ஆடவர் ஒருவர் இறந்து கிடந்ததை போலீசார் உறுதிப்படுத்தினர் என சீன ஊடகம் Lianhe Zaobao கூறியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து அன்றைய தினம் மதியம் 12:35 மணியளவில் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அந்த வீடியோ உண்மை என்றும் கூறப்பட்டுள்ளது.

அந்த ஆடவர் அசைவில்லாமல் இருந்தார் என்றும், சம்பவ இடத்திலேயே அவர் இறந்துவிட்டதாக மருத்துவ உதவியாளர்கள் உறுதி செய்தனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கை இயற்கைக்கு மாறான மரணம் என்று போலீசார் வகைப்படுத்தியுள்ளனர்.

முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், போலீசார் எந்த சதிச்செயலையும் இதில் சந்தேகிக்கவில்லை என கூறியுள்ளனர்.

விசாரணைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

‘திருச்சி, கோவை உள்பட ஐந்து நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு ‘VTL’ விமான சேவை’- ஸ்கூட் ஏர்லைன்ஸ் அறிவிப்பு!