ஊழியர் பற்றாக்குறை… கட்டுமான, கடல் துறை Work permit ஊழியர்களின் நுழைவு நடைமுறை எளிமை! – செய்ய வேண்டியது என்ன?

more-public-sector-construction-projects-come-under-stricter
Photo: AFP/Roslan Rahman

கட்டுமானம், கடல் தளம் மற்றும் செயல்முறை (CMP) துறைகளில் உள்ள ஊழியர்களுக்கான நுழைவு நடைமுறைகளை எளிமைப்படுத்துவதாக ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 6) சிங்கப்பூர் தெரிவித்துள்ளது.

இந்த துறைகளில் உள்ள ஊழியர்களின் பற்றாக்குறையை குறைக்க உதவும் வகையில் நுழைவுத் தேவைகளை நெறிப்படுத்துவதாக கூறப்பட்டுள்ளது.

இந்தியாவின் அனைத்து நகரங்களில் இருந்தும் சிங்கப்பூருக்கு தனிமை இல்லா சேவை!

தற்போதைய நடைமுறை:

இந்தத் துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் தற்போது இரண்டு நுழைவுப் பாதைகள் வழியாக சிங்கப்பூர் வருகின்றனர். முதலாவது துறைசார்ந்த பயண முறை end-to-end மூலமும், இரண்டாவது Work Pass Holder General Lane மூலமும் வருகின்றனர்.

சிங்கப்பூருக்கு வருவதற்கு முன் CMP துறைகளைச் சேர்ந்த அனைத்து ஊழியர்களும் முழுமையாக தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்பது நவம்பர் 1, 2021 முதல் கட்டாய நடைமுறையில் உள்ளது.

‘திருச்சி, கோவை உள்பட ஐந்து நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு ‘VTL’ விமான சேவை’- ஸ்கூட் ஏர்லைன்ஸ் அறிவிப்பு!

புதிய நடைமுறை:

இந்நிலையில், இந்த நடைமுறையை எளிமைப்படுத்துவதாக கட்டிடம் மற்றும் கட்டுமான ஆணையம் (BCA), மனிதவள அமைச்சகம் (MOM) மற்றும் பொருளாதார வளர்ச்சிக் கழகம் (EDB) ஆகியவை கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளன.

துறைசார்ந்த பயண முறையில், ஊழியர்கள் சொந்த நாட்டில் புறப்படுவதற்கு முன்னர் நிர்ணயிக்கப்பட்ட இட வசதியில் இரண்டு நாள் தங்க வேண்டும். இதனை PDPP என கூறுகின்றனர்.

அதே போல, சொந்த நாட்டில் இருந்து புறப்படும் முன்னர் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

சிங்கப்பூர் வந்த பின்னர் ஊழியர்கள், மூன்று நாள் SHN தனிமையை நிறைவேற்ற வேண்டும்.

சிங்கப்பூரில் Employment Pass அனுமதிக்கு புதிய புள்ளிகள் முறை – வாங்க அதுபற்றி பார்ப்போம்!

PDPP (Pre-departure preparatory programme) பாதை திட்டம்:

வங்கதேசம், இந்தியா மற்றும் மியான்மரில் இருந்து வரும் work permit ஊழியர்களுக்கு மார்ச் 13 முதல் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

இந்த நாடுகளைச் சேர்ந்த Work permit அனுமதி வைத்திருப்பவர்கள் அவரவர் நாடுகளில் PDPP நடைமுறைக்கு உட்பட வேண்டும்.

அதாவது, ஊழியர்கள் சொந்த நாட்டில் புறப்படுவதற்கு முன்னர் நிர்ணயிக்கப்பட்ட வசதியில் இரண்டு நாள் தங்க வேண்டும்.

சிங்கப்பூரில் Work permit, S Pass வெளிநாட்டு ஊழியர்களுக்கு இது கட்டாயம் – புதிய விண்ணப்பம், புதுப்பித்தலுக்கு பொருந்தும்

Image: BCA, MOM, EDB

மே 1 முதல், தடுப்பூசி போட்டுக்கொண்ட ஒவ்வொரு புதிய CMP work permit ஊழியரும் PDPP பாதை வழியாக மட்டுமே நுழைவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.