திருத்தியமைக்கப்பட்ட பொருள், சேவை வரி மசோதா குறித்து விரிவாகப் பார்ப்போம்!

ஆன்லைன் மூலம் வாங்கப்படும் 400 சிங்கப்பூர் டாலருக்கும் குறைவான விலையில் உள்ள பொருட்களுக்குப் பொருள், சேவை வரி (Goods and Services Tax- ‘GST’) விதிப்பதற்கு சட்டத்தில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்த மசோதா சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் தாக்கலானது. மசோதாவானது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால், திருத்தியமைக்கப்பட்ட பொருள், சேவை வரி மசோதா 2023- ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1- ஆம் தேதி அன்று அமலுக்கு வரும்.

மூத்தோர் பராமரிப்பு இல்லங்களில் வருகையாளர்களுக்கான தடை நீட்டிப்பு!

அஞ்சல் அல்லது விமானம் வழியாக இறக்குமதி செய்யப்படும் குறைந்த மதிப்பிலான அனைத்துப் பொருட்களுக்கும் பொருள், சேவை வரி விதிக்கப்படுகிறது. நிலம், கடல் வழியாக இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் ஏற்கனவே பொருள், சேவை வரிக்கு உட்படுத்தப்படுகின்றன. அதேபோல், தற்போது 400 சிங்கப்பூர் டாலருக்கும் அதிகமான பொருட்கள் ஏற்கனவே பொருள், சேவை வரிக்கு உட்படுத்தப்படுகின்றன. மசோதா அமலுக்கு வந்தால் 400 சிங்கப்பூர் டாலருக்கும் குறைவான மதிப்புள்ள பொருட்களுக்கும் வரியானது விதிக்கப்படும்.

உள்ளூர் நிறுவனங்களுடன் போட்டியிடும் வெளிநாட்டு வர்த்தகர்களுக்கு இடையே சமநிலையை ஏற்படுத்துவது ஆகும். அதனால், வெளிநாட்டு வர்த்தகர்களும், உள்ளூர் நிறுவனங்கள் எதிர்நோக்கும் பொருள், சேவை வரிக்கு உட்படுத்தப்படுவர். வளர்ந்துவரும் மின்னிலக்கப் பொருளியலில் பொருள், சேவை வரி அமைப்பு வலுவாக இருக்க அந்தப் புதிய மாற்றம் உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலாளியிடமிருந்து பணத்தைத் திருடியப் பணிப்பெண்ணுக்கு சிறை!

இந்த வரி விதிப்பால் சிங்கப்பூர் அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா காரணமாக, அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்ட நிலையில், இந்த வரி மாற்றங்கள் மூலம் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

மெய்நிகர் வாயிலாக நேரடியாக வெளிநாடுகளில் இருந்து வழங்கப்படும் கற்றல் சேவைகள், டெலிமெடிசன் எனப்படும் தொலைத்தொடர்பு மருத்துவ சிகிச்சை ஆகியவற்றுக்கும் திருத்தியமைக்கப்பட்ட மசோதா பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.