மூத்தோர் பராமரிப்பு இல்லங்களில் வருகையாளர்களுக்கான தடை நீட்டிப்பு!

Photo: todayonline

சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை அமைச்சகம் முடுக்கிவிட்டுள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டுள்ளன.

பொதுமக்கள் அவசியமின்றி வெளியே செல்ல வேண்டாம்; அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியில் செல்வோர் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு தனியார் வீடுகளை வாடகைக்கு வழங்கிய இருவர் மீது குற்றச்சாட்டு

வணிக நிறுவனங்கள், உணவகங்கள் உள்பட அனைத்து இடங்களிலும் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்றுகிறார்களா என்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்.

அதேபோல், கொரோனா தடுப்பூசிப் போடும் பணிகள் எந்தவித இடையூறுமின்றித் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. தற்போது வரை மொத்த மக்கள் தொகையில் 82%- க்கும் அதிகமானோர் கொரோனா தடுப்பூசியை முழுமையாகச் செலுத்திக் கொண்டுள்ளனர். மேலும், இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொண்ட மூத்தோர்களுக்கு ‘பூஸ்டர்’ தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வருகிறது.

வேலை அனுமதி அட்டை காலாவதியாகியும் சட்ட விரோதமாகத் தங்கியதற்காக எத்தனை பேர் கைது?- அமைச்சர் கா.சண்முகம் விளக்கம்!

இந்த நிலையில் சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று (05/10/2021) வெளியிட்டிருந்த அறிவிப்பில், “சமூக அளவிலும், மூத்தோர் பராமரிப்பு இல்லங்களிலும் பதிவாகும் கொரோனா நோய்த்தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், மூத்தோர் பராமரிப்பு இல்லங்களில் வருகையாளர்களுக்கான தடை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிப்படுகிறது. அதன்படி, வரும் அக்டோபர் 24- ஆம் தேதி வரை தடையானது நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சமூகத்தில் இருந்து நோய்த்தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த முடியும்.

குடும்பத்தார், தொடர்ந்து மூத்தோருடன் தொடர்பில் இருப்பதை உறுதிச் செய்ய, காணொளி வழி தொலைபேசி அழைப்புகளுக்கு ஏற்பாடு செய்யப்படும். தடையின் நீட்டிப்பு, மூத்தோர் ‘பூஸ்டர்’ தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளக் கூடுதல் அவகாசத்தை வழங்குகிறது.

முதலாளியிடமிருந்து பணத்தைத் திருடியப் பணிப்பெண்ணுக்கு சிறை!

மூத்தோர் பராமரிப்பு இல்லங்களில் வசிக்கும் கொரோனா தடுப்பூசிப் போட்டுக் கொள்ளாத மூத்தோரைத் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஊக்குவிக்கும்படி குடும்பத்தார் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்படும். நடைமுறை அதற்கு ஏற்றவாறு மாற்றப்படும்.” இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சகத்தின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூத்தோர் பராமரிப்பு இல்லங்களில் வருகையாளர்களுக்கானத் தடை கடந்த செப்டம்பர் 13- ஆம் தேதி முதல் அமலில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.