வெளிநாட்டு ஊழியர்களுக்கு தனியார் வீடுகளை வாடகைக்கு வழங்கிய இருவர் மீது குற்றச்சாட்டு

Google Maps streetview

வெளிநாட்டு ஊழியர்களுக்கு தனியார் குடியிருப்பு வீடுகளை வாடகைக்கு வழங்கிய சிங்கப்பூர் ஆடவர் மீது மனிதவள அமைச்சகம் (MOM) குற்றம் சாட்டியுள்ளது.

42 வயதான லாவ் லியாங் தேயின் (Lau Liang Thye) இந்த நடவடிக்கைகள் கடந்த 2018 அன்று MOM மற்றும் URA இணைந்து ஆய்வு செய்தபோது கண்டுபிடிக்கப்பட்டது.

தங்கும் விடுதிகளுக்கு அப்பால் தொற்று பரவியதற்கான ஆதாரம் ஏதும் இல்லை – MOH

இதில் 32 மற்றும் 34 லோரோங் 23 கெய்லாங்கில் உள்ள இரண்டு மூன்று-மாடி கடை வீடுகளில் 39 பேர் தங்கியிருப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

மேலும் விசாரணையில், மற்றொறு சிங்கப்பூரரான 58 வயதான டே கிம் கியாத்திடம் இருந்து லாவ் இரண்டு மற்றும் மூன்றாவது தளத்தை வாடகைக்கு எடுத்து 22 வெளிநாட்டு ஊழியர்கள் உட்பட மற்ற வாடகைதாரர்களுக்கு வழங்கினார் என்பது தெரியவந்தது.

வெளிநாட்டு ஊழியர்களின் முதலாளிகள், இரண்டு வாரங்களுக்குள் சரியான மற்றும் அங்கீகரிக்கப்பட்ட விடுதிக்கு அவர்களை இடமாற்றம் செய்ய MOM உத்தரவிட்டது.

வெளிநாட்டு ஊழியர்களை அங்கீகரிக்க முடியாத தங்குமிடத்தில் தங்க வைக்க முதலாளிகளை ஊக்குவித்ததற்காக 11 குற்றச்சாட்டுகள் லாவ் மீது சுமத்தப்பட்டது.

மேலும், சட்டவிரோதமாக work pass அனுமதி இல்லாமல் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்தியதற்காக ஒரு குற்றச்சாட்டும் அவர் மீது பதிவு செய்யப்பட்டது.

வேலையிடத்தில் கீழே விழுந்து இறந்த வெளிநாட்டவர் – கட்டுமான நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க MOM பரிசீலனை