தங்கும் விடுதிகளுக்கு அப்பால் தொற்று பரவியதற்கான ஆதாரம் ஏதும் இல்லை – MOH

(Photo: Roslan Rahman/AFP via Getty Images)

சிங்கப்பூரில் தற்போது 5 வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் தொற்று குழுமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அதோடு சேர்த்து, Learning Vision @ Changi Airport உட்பட 8 குழுமங்களை சுகாதார அமைச்சகம் உன்னிப்பாக கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளது.

வேலையிடத்தில் கீழே விழுந்து இறந்த வெளிநாட்டவர் – கட்டுமான நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க MOM பரிசீலனை

ஐந்து தங்கும் விடுதிகள்:

  • ASPRI-Westlite Papan தங்கும் விடுதி
  • PPT Lodge 1B தங்கும் விடுதி
  • Avery Lodge தங்கும் விடுதி
  • Tampines தங்கும் விடுதி
  • 9 Defu South Street 1ல் உள்ள தங்கும் விடுதி

சிங்கப்பூரில் நேற்றைய நிலவரப்படி, தங்கும் விடுதிகளில் உள்ள 601 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.

அனைத்து தங்கும் விடுதி குழுமங்களிலும் விடுதிகளுக்கு அப்பால் தொற்று பரவியதற்கான ஆதாரம் ஏதும் இல்லை என MOH குறிப்பிட்டது.

மேலும், குடியிருப்பாளர்களிடையே உள்-விடுதி பரிமாற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் MOH தெரிவித்துள்ளது.

445 கோவிட் -19 நோய்த்தொற்று பாதிப்புகளுடன், Avery Lodge மிகப்பெரிய குழுமமாக உள்ளது. திங்களன்று ஆறு புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் மேலும் 8 பேர் உயிரிழப்பு