வேலையிடத்தில் கீழே விழுந்து இறந்த வெளிநாட்டவர் – கட்டுமான நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க MOM பரிசீலனை

Credit: TODAY

கட்டுமான நிறுவனமான JMS கன்ஸ்ட்ரக்சன் மீது நடவடிக்கை எடுக்க மனிதவள அமைச்சகம் (MOM) பரிசீலித்து வருகிறது.

அதன் நிறுவன இயக்குநர் கடந்த பிப்ரவரியில் Dunearn சாலையில் உள்ள வீட்டில் நடந்த வேலையிட விபத்தில் இறந்தார்.

சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் மேலும் 8 பேர் உயிரிழப்பு

கோ கோக் ஹெங்கின் (Koh Kok Heng) மரணம் குறித்து நேற்று (அக்டோபர் 4) நடந்த விசாரணையின் போது, ​​JMS கட்டுமான நிறுவனத்திற்கு எதிராக அமைச்சகம் என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பதை MOMன் விசாரணை அதிகாரிகள் குறிப்பிடவில்லை.

நிறுவனத்தின் இரண்டு இயக்குனர்களில் ஒருவரான கோ, இரண்டு மாடி வீட்டின் மாடி தரை திறப்பு வழியாக சுமார் 4.7மீ கீழே படிக்கட்டில் விழுந்தார்.

“உயரத்தில் இருந்து விழுவதுக்கு சாத்தியமான ஆபத்து உள்ளது என்று JMS கன்ஸ்ட்ரக்ஷன் அடையாளம் கண்டுள்ளது.”

ஆனால், கோ மற்றும் அவரது ஊழியர்கள் பாதுகாப்பு கவசங்களை அணியத் தவறியதாகவும் MOMன் மூத்த புலனாய்வு அதிகாரி இங் சீ வீ (Ng Chee Hwee) நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார்.

அந்த விபத்து நடந்த நாளில் கட்டுமான நிறுவனம் வேலை செய்ய அனுமதி வழங்கவில்லை என்று திரு இங் கூறினார்.

மலேசியாவைச் சேர்ந்த நிரந்தரவாசியான கோ, கடந்த பிப்ரவரி 10 மதியம் 12.45 மணியளவில் நொவெனாவில் உள்ள டான் டோக் செங் மருத்துவமனையில், விபத்து நடந்த ஒரு மணி நேரத்திற்குப் பிறகு உயிரிழந்தார்.

தேக்கா நிலையம் உள்ளிட்ட நிலையங்களில் சோதனை – பாதுகாப்பு விதியை மீறியதாக 188 பேர் பிடிபட்டனர்