தேக்கா நிலையம் உள்ளிட்ட நிலையங்களில் சோதனை – பாதுகாப்பு விதியை மீறியதாக 188 பேர் பிடிபட்டனர்

Photo : Singapore Police

உணவங்காடி நிலையங்களில் பாதுகாப்பு மேலாண்மை நடவடிக்கைகளை மீறியதாக 188 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசியச் சுற்றுசூழல் அமைப்பு (NEA) தெரிவித்துள்ளது.

இந்த மாதம் முதல் 3 நாட்கள் உணவங்காடி நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட அமலாக்க நடவடிக்கைகளை தொடர்ந்து அவர்கள் பிடிபட்டனர்.

மலேசியாவிற்கு விமான சேவை மீண்டும் எப்போது தொடங்கும் ?

சிங்கப்பூர் காவல் படையின் ஆதரவுடன், அக்டோபர் 1 முதல் 3 வரை இந்த அமலாக்க நடவடிக்கைகளை நடத்தியதாக அமைப்பு தெரிவித்துள்ளது.

சமீபத்திய கட்டுப்பாடுகள் தொடங்கப்பட்ட முதல் வார இறுதி இது, அதிகபட்சமாக ஒரு குழுவில் இரண்டு பேர் மட்டுமே அமர்ந்து உணவருந்த அனுமதி உள்ளது.

இரண்டுக்கும் மேற்பட்ட குழுக்களில் ஒன்று கூடுதல், 1மீ பாதுகாப்பான இடைவெளியை பின்பற்ற தவறுவது, முகக்கவசம் அணியாதது அல்லது அவற்றை முறையாக அணியாதது, அத்துடன் இரவு 10.30 மணிக்கு மேல் மது அருந்துதல் ஆகிய குற்றங்கள் இதில் கண்டுபிடிக்கப்பட்டதாக NEA தெரிவித்துள்ளது.

நியூட்டன் உணவு நிலையம், வாம்போவா (Whampoa) உணவு நிலையம், ஹைக் சாலை சந்தை மற்றும் உணவு நிலையம், கோல்டன் மைல் உணவு நிலையம், ஹாங் லிம் சந்தை மற்றும் உணவு நிலையம், சைனாடவுன் காம்ப்ளக்ஸ் மார்க்கெட் மற்றும் உணவு நிலையம் மற்றும் தேக்கா நிலையம் போன்ற நிலையங்களுக்கு அமலாக்க அதிகாரிகள் சென்றனர்.

வடிகால் குழாயில் சிக்கிக்கொண்ட மலைப்பாம்பு – சுமார் 3.5 மணி நேரம் போராடி மீட்பு (காணொளி)