மலேசியாவிற்கு விமான சேவை மீண்டும் எப்போது தொடங்கும் ?

Malaysia Airports/Facebook

மலேசியா 90 சதவீத தடுப்பூசி வீதத்தை அடைந்த பிறகு மீண்டும் பயணத்தை தொடங்க மலேசியர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

இதனை மலேசியப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி, மிங்குவான் மலேசியாவுடனான நேர்காணலில் கூறியதாக மலாய் மெயில் கூறியுள்ளது.

வடிகால் குழாயில் சிக்கிக்கொண்ட மலைப்பாம்பு – சுமார் 3.5 மணி நேரம் போராடி மீட்பு (காணொளி)

மாநில எல்லைகளை மீண்டும் திறப்போம் என்றும், 90 சதவீத தடுப்பூசி விகிதத்தை அடைந்த பிறகு மற்ற நாடுகளுக்கும் பயணம் அனுமதிக்கப்படும் என்றும் இஸ்மாயில் சப்ரி கூறினார்.

மேலும், இந்த அனுமதி டிசம்பர் மாதத்திலோ அல்லது முன்னதாகவோ நடக்கலாம் என்று அவர் கூறினார்.

உலகளாவிய பயணம் மீண்டும் தொடங்கியவுடன், மலேசியர்கள் இனி நுழைவு மற்றும் வெளியேறும் அனுமதிகளுக்கு விண்ணப்பிக்க மலேசியாவின் குடிவரவுத் துறையின் இணையதளமான MyTravelPassல் விண்ணப்பிக்கத் தேவையில்லை என்றும் அவர் கூறினார்.

இருப்பினும், பயணிகளுக்கான தனிமைப்படுத்தல் தேவைகள் அப்படியே உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

யூஷூனில் ஆடவரை கத்தியால் தாக்கிய இருவர் கைது