வடிகால் குழாயில் சிக்கிக்கொண்ட மலைப்பாம்பு – சுமார் 3.5 மணி நேரம் போராடி மீட்பு (காணொளி)

Python rescued from drainage
Photo: Acres

சிங்கப்பூரில் மலைப்பாம்பு ஒன்று வடிகால் குழாயில் சிக்கிக்கொண்டு, வெளியில் வரமுடியாமல் தவித்தது.

கடந்த மாதம் 20ஆம் தேதி, விலங்கு ஆராய்ச்சி மற்றும் கல்விச் சங்கத்திலிருந்து (Acres) மீட்புப் குழுவினர் உதவிக்காக அழைக்கப்பட்டனர்.

யூஷூனில் ஆடவரை கத்தியால் தாக்கிய இருவர் கைது

இதனை அடுத்து, வடிகால் குழாயில் சிக்கிக்கொண்ட மலைப்பாம்பை காப்பற்ற அக்குழுவினர் விரைந்து வந்தனர்.

இந்த சம்பவம் அட்மிரால்டி அருகில் செனோகோவில் (Senoko) உள்ள வாய்க்காலில் நடந்தது குறிப்பிடத்தக்கது.

அருகிலுள்ள தொழிற்சாலையைச் சேர்ந்த ஒரு ஊழியர், மலைப்பாம்பு சிக்கியிருப்பதை கவனித்து, உதவிக்காக Acres குழுவினரை அழைத்தார்.

இதனை Acres இணை தலைமை நிர்வாக அதிகாரி கலை வாணன் மதர்ஷிப்பிற்கு தெரிவித்தார்.

அதனை மீட்கும் நடவடிக்கை சுமார் 3.5 மணி நேரம் நடந்தது, இதில் அக்குழுவைச் சேர்ந்த ஆறு பேர் பங்கேற்றனர்.

Acres மீட்புப் குழு இதுபோன்ற சூழ்நிலைகளில் இருந்து எண்ணற்ற மலைப்பாம்புகள் மற்றும் பிற பாம்புகளை காப்பாற்றியதாக கலை மதர்ஷிப்பிற்கு தெரிவித்தார்.

சிங்கப்பூருக்கு வேலைக்கு வரும் தமிழக ஊழியர்கள், ஏஜென்சிகளுக்கு அதிக பணம் செலுத்துவதால் பெரும் துயரத்திற்கு ஆளாகின்றனர்!