சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் மேலும் 8 பேர் உயிரிழப்பு

Photo: Yahoo

சிங்கப்பூரில் நேற்றைய (அக்டோபர் 4) நிலவரப்படி, கிருமித்தொற்றால் மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) கூறியுள்ளது.

உயிரிழந்த எட்டு பேரும் சிங்கப்பூரர்கள், இதில் 4 பேர் ஆண்கள் மற்றும் 4 பேர் பெண்கள் அடங்குவர்.

தேக்கா நிலையம் உள்ளிட்ட நிலையங்களில் சோதனை – பாதுகாப்பு விதியை மீறியதாக 188 பேர் பிடிபட்டனர்

அவர்கள் அனைவரும் 60 முதல் 94 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.

அவர்களில் மூன்று பேர் COVID-19க்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை மற்றும் ஐந்து பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள்.

அவர்கள் அனைவருக்கும் பல்வேறு அடிப்படை மருத்துவ பிரச்சனைகள் இருந்ததாகவும் அமைச்சகம் கூறியுள்ளது.

சிங்கப்பூரில் தொற்றால் ஏற்பட்ட மொத்த இறப்புகளின் எண்ணிக்கை தற்போது 121ஆக உள்ளது.

மலேசியாவிற்கு விமான சேவை மீண்டும் எப்போது தொடங்கும் ?