வேலை அனுமதி அட்டை காலாவதியாகியும் சட்ட விரோதமாகத் தங்கியதற்காக எத்தனை பேர் கைது?- அமைச்சர் கா.சண்முகம் விளக்கம்!

foreign worker case singapore take action
Pic: Raj Nadarajan/Today

சிங்கப்பூரில் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு, அந்தந்த துறை அமைச்சர்கள் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்து வருகின்றன. மேலும், பொருள், சேவை வரி சட்டத் திருத்த மசோதா, நினைவு சின்னங்களைப் பாதுகாக்கும் சட்டத் திருத்த மசோதா, சிங்கப்பூர் அரசியலில் வெளிநாட்டு தலையீட்டைத் தடுப்பதற்கான உத்தேச சட்டம் ஆகியவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் சில மசோதாக்கள் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டன.

கோயில் தீமிதித் திருவிழா 2021- இரண்டாம் கட்ட முன்பதிவுகள் தொடங்கியது!

இந்த நிலையில், சிங்கப்பூரில் கடந்த 10 ஆண்டில் வேலை அனுமதி அட்டை காலாவதியாகியும் சட்ட விரோதமாக இங்கு தங்கியதற்காக எத்தனை பேர் கைது செய்யப்பட்டனர் என்று நேற்றைய (04/10/2021) நாடாளுமன்றக் கூட்டத்தின் போது உறுப்பினர் கேள்வி எழுப்பினார். இதற்கு உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் கா.சண்முகம் நாடாளுமன்றத்தில் எழுத்துப் பூர்வமாகப் பதிலளித்தார்.

அதில் கூறியதாவது, “2011- ஆம் ஆண்டு முதல் 2020- ஆம் ஆண்டு வரை குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணைய அதிகாரிகள் சிங்கப்பூரில் சட்ட விரோதமாகத் தங்கியதற்காக 1,746 வெளிநாட்டு தொழிலாளர்களைச் சட்டவிரோதமாக கைது செய்தனர். அவர்களில் 1,027 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டது.

மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு சிறை!

மீதுமுள்ள நபர்கள் என்ன காரணங்களுக்காக அயல்நாட்டு நுழைவுச் சான்றின் காலம் முடிந்தும் சிங்கப்பூரில் தங்கினார்கள் என்பதை விசாரணை மூலம் அறிந்துக் கொண்டு அவர்களுக்கு அபராதமும், எச்சரிக்கையும் விதிக்கப்பட்டது.” இவ்வாறு அமைச்சரின் விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.