கோயில் தீமிதித் திருவிழா 2021- இரண்டாம் கட்ட முன்பதிவுகள் தொடங்கியது!

Sri Mariyamman temple Firewalking Ceremony

சிங்கப்பூரில் சௌத் பிரிட்ஜ் சாலையில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயில் மிகவும் பிரசித்திப் பெற்றது. இந்த கோயிலில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளிநாட்டு பயணிகளும் தரிசனம் செய்து வருகின்றன. இக்கோயிலில் ஆண்டுதோறும் தீமிதித் திருவிழா நடைபெறுவது வழக்கம். தற்போது, கொரோனா பரவல் காரணமாக, இந்த ஆண்டு தீமிதித் திருவிழா எளிமையான முறையில், அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நடத்தப்படும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்திருந்தது.

வேலையிடத்தில் கீழே விழுந்து இறந்த வெளிநாட்டவர் – கட்டுமான நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க MOM பரிசீலனை

இந்த நிலையில், விழாவானது வரும் அக்டோபர் 16- ஆம் தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து, தீமிதித் திருவிழா வரும் அக்டோபர் 24- ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த திருவிழாவில் பங்கேற்பதற்கான இரண்டாம் கட்ட முன்பதிவுகள் இன்று (05/10/2021) 11.30 மணிக்கு தொடங்கியது. அக்டோபர் 16- ஆம் தேதி அன்று இரவு 11.30 மணி வரை பொதுமக்கள் இணையதளம் மூலம் முன்பதிவு செய்துக் கொள்ளலாம். இரண்டாம் கட்ட முன்பதிவுகள் தீமிதித் திருவிழாவில் பங்கேற்க விரும்புவோர்களுக்கு மட்டுமே எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா சூழலில் திருவிழா நடப்பதால் விதிமுறைகளில் எப்போது வேண்டுமானாலும் மாற்றங்கள் வரலாம் என்று விழா ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் கொரோனா நிலவரம் குறித்த முழுமையான தகவல்!

பூக்குழியில் இறங்க பெண்களுக்கும், 16 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கும் அனுமதி இல்லை. பூக்குழியில் இறங்குபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். கொரோனா தடுப்பூசியை முழுமையாகச் செலுத்திக் கொண்டவர்கள், கொரோனா முன் பரிசோதனை செய்து நோய்த்தொற்று இல்லை என உறுதிச் செய்யப்பட்டவர்கள் ஆகியோர் மட்டும்தான் கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவர். முன்பதிவு இல்லாமல் கோயிலுக்குள் வருபவர்களும் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

கோயில் திருவிழாவில் பங்கேற்பவர்கள் அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், மக்கள் தங்கள் வீடுகளில் இருந்தே விழாவை காணும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் ரொக்கமில்லா கட்டணச் சேவைகளின் பயன்பாடு கணிசமாக உயர்வு!

தீமிதித் திருவிழா தொடர்பான மேலும் விவரங்களுக்கு இந்து அறக்கட்டளை வாரியத்தின் அதிகாரப்பூர்வ https://heb.org.sg/firewalking2021/ என்ற இணையத்தளத்தை அணுகலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.