சிங்கப்பூரில் ரொக்கமில்லா கட்டணச் சேவைகளின் பயன்பாடு கணிசமாக உயர்வு!

File Photo

 

உலகம் முழுவதும் தற்போது ரொக்கமில்லா கட்டணச் சேவையை பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றன. ஆண்ட்ராய்டு செயலி மூலம் கட்டண செலுத்த முடியும் என்பதால், அந்த செயலிகளின் எண்ணிக்கையும், அதனை சார்ந்த வேலை வாய்ப்புகளும் அதிகரித்துள்ளனர். Credit Cards, Debit Cards ஆகியவைப் பயன்படுத்தியும் ரொக்கமில்லா பரிவர்த்தனையை பொதுமக்கள் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, சிங்கப்பூரில் ரொக்கமில்லா கட்டணச் சேவையைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் மேலும் 8 பேர் உயிரிழப்பு

உங்களுக்கு புரியும்படி சொல்லவேண்டுமானால், டீ கடை முதல் மிகப்பெரிய ஷாப்பிங் மால் வரை தாங்கள் வாங்கும் எந்தவொரு பொருட்களுக்கும் பொதுமக்கள் தங்களது ஆண்ட்ராய்டு அல்லது ஐ போன் செயலி மூலம் ‘QR’ CODE- யை ஸ்கேன் செய்து பொருட்களுக்கான கட்டணத்தை கடையின் உரிமையாளரிடம் செலுத்துகின்றன. இதுவே ரொக்கமில்லா கட்டணச் சேவை ஆகும்.

ரொக்கமில்லா கட்டணச் சேவையை மேற்கொள்ள உதவும் Google Pay, Paytm, Amazon Pay, JIO Money, Freecharge, Airtel Money, PhonePe, WhatsApp Pay ஆகிய செயலிகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. குறிப்பாக, சிங்கப்பூரில் PayNow, PayNow Corporate, SGQR ஆகியவை மூலம் கடந்த மூன்று ஆண்டுகளாக ரொக்கமில்லாமல் பரிவர்த்தனைகள் செய்யப்படுகின்றன. அவை தவிர, Credit Cards, Debit Cards ஆகியவையும் உள்ளன.

சிங்கப்பூரில் கொரோனா நிலவரம் குறித்த முழுமையான தகவல்!

PayNow, PayNow Corporate ஆகியவற்றின் பயன்பாடு சென்ற ஆண்டு அதற்கு முந்தைய ஆண்டைவிட ஒரு மடங்கு அதிகரித்தது. இவ்வாண்டின் முதல் பாதியிலும் அதன் பயன்பாடு கணிசமாக அதிகரித்துள்ளது. சிங்கப்பூரில் கிட்டத்தட்ட 75% வர்த்தகங்கள் SGQR- கட்டண முறையைப் பயன்படுத்துக்கின்றன.

அதேவேளை SGQR- மின் கட்டண முறையைப் பயன்படுத்தக்கூடிய இடங்களின் எண்ணிக்கை ஆண்டு அடிப்படையில் பார்க்கும் போது, 2019- ஆம் ஆண்டு 42,000 ஆகவும், 2020- ஆம் ஆண்டு 1,20,000 ஆகவும் இருந்த நிலையில் நடப்பாண்டில் 2,60,000 ஆக அதிகரித்துள்ளது. வரும் காலங்களில் ரொக்கமில்லா கட்டணச் சேவை அதிவேக வளர்ச்சிப் பெறும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

தேக்கா நிலையம் உள்ளிட்ட நிலையங்களில் சோதனை – பாதுகாப்பு விதியை மீறியதாக 188 பேர் பிடிபட்டனர்

ரொக்கமில்லா கட்டணச் சேவை தொடர்பாக எழுப்பப்பட்டக் கேள்விக்கு, நாடாளுமன்றத்தில் எழுத்துப் பூர்வமாக சம்மந்தப்பட்டத் துறை அமைச்சகம் பதிலளித்தது. அதில், இத்தகைய தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.