சிங்கப்பூரில் கொரோனா நிலவரம் குறித்த முழுமையான தகவல்!

Photo: Ooi Boon Keong/TODAY)

சிங்கப்பூரில் கடந்த சில தினங்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் தினசரி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை முடுக்கிவிட்டது. மேலும், கொரோனா பரவலைத் தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டன. இதன் பயனாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்திருக்கிறது. இது பொதுமக்களுக்கு ஆறுதலை அளித்துள்ளது.

சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் மேலும் 8 பேர் உயிரிழப்பு

கொரோனா பாதிப்பு குறித்து சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று (04/10/2021) வெளியிட்டிருந்த அறிவிப்பில், “சிங்கப்பூரில் நேற்று (04/10/2021) மதியம் நிலவரப்படி, புதிதாக 2,475 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. உள்ளூர் அளவில் 2,460 பேருக்கு நோய்த்தொற்று உறுதிச் செய்யப்பட்டது. இதில், சமூக அளவில் 1,859 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் 601 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து சிங்கப்பூருக்கு வந்தவர்களுக்கு மேற்கொள்ள பரிசோதனையில் 15 பேருக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,06,318 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பால் 1,355 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வருகின்றன. இதில், 226 பேருக்கு ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 35 பேர் கவலைக்கிடமான நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றன.

தேக்கா நிலையம் உள்ளிட்ட நிலையங்களில் சோதனை – பாதுகாப்பு விதியை மீறியதாக 188 பேர் பிடிபட்டனர்

கொரோனா பாதிப்பால் மேலும் 8 பேர் உயிரிழந்ததால், சிங்கப்பூரில் கொரோனாவால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 121 ஆக உயர்ந்துள்ளது, உயிரிழந்தவர்களின் பெரும்பாலானோர் முதியவர்கள் ஆவர்.” இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சகத்தின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.