வீவக மறுவிற்பனைப் பரிவர்த்தனைகள் குறைந்தது!

Photo: Housing And Development Board

சிங்கப்பூரில் வீடமைப்பு வளர்ச்சி கழகத்தின் மறுவிற்பனை வீடுகளின் விலைகள் கடந்த சில ஆண்டுகளாக இல்லாத உச்சத்தைத் தொட்டதைத் தொடர்ந்து, மக்கள் தற்போது வீடுகளை வாங்க தயக்கம் காட்டி வருகின்றன. இதன் காரணமாக, கடந்த செப்டம்பர் மாதம் குறைவான எண்ணிக்கையில் வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் மறுவிற்பனை வீட்டுப் பரிவர்த்தனைகள் பதிவாகின.

“நிச்சயமாக ஒரு நல்ல எதிர்காலத்தை நம்மால் உருவாக்க முடியும்”- அமைச்சர் எஸ்.ஈஸ்வரன்!

கடந்த செப்டம்பர் மாதம் 2,518 வீடமைப்பு மறுவிற்பனை வீட்டுப் பரிவர்த்தனைகள் இடம் பெற்றன. இது கடந்த ஆகஸ்ட் மாதம் பதிவானதைக் காட்டிலும் இந்த எண்ணிக்கை 8.4% குறைவு என்று சிங்கப்பூர் சொத்துச் சந்தை நிறுவனம் வெளியிட்ட தகவல்களில் குறிப்பிடப்பட்டது.

இருப்பினும், கடந்த ஆகஸ்ட் மாதம் இருந்ததைக் காட்டிலும் வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் மறுவிற்பனை வீட்டு விலைகள் 0.9% அதிகரித்தன. மாத அடிப்படையில் பார்க்கும் போது சுமார் எட்டரை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விலைகள் அதிகரித்தன. குறிப்பாக, தொடர்ந்து 15 மாதங்களாக வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் மறுவிற்பனை வீட்டு விலைகள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

கொரோனா நிலவரம் குறித்து நாளை உரையாற்றவிருக்கும் பிரதமர் லீ சியன் லூங்!

முதிர்ச்சியடைந்த மற்றும் முதிர்ச்சியடையாத இரண்டு வகையான பேட்டைகளிலும் எல்லா மறுவிற்பனை வீட்டு விலைகளும் அதிகரித்தன. கடந்த செப்டம்பர் மாதம் வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் 23 வீடுகள் குறைந்தது ஒரு மில்லியன் சிங்கப்பூர் டாலருக்கு விற்கப்பட்டன. ஆகஸ்ட் மாதம் மட்டும் 26 பரிவர்த்தனைகள் இடம்பெற்றன.

கொரோனா பரவலால் கட்டுப்பாடுகள் அமலில் இருந்தப் போதிலும், வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் வீடுகள் விற்பனை அமோக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.