கொரோனா நிலவரம் குறித்து நாளை உரையாற்றவிருக்கும் பிரதமர் லீ சியன் லூங்!

(PHOTO: MCI)

சிங்கப்பூரில் தொடர்ந்து மூன்றாவது நாளாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் தினசரி எண்ணிக்கை 3,000- ஐ கடந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா தடுப்பு பணிகள் ஒருபுறம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், மற்றொருபுறம் கொரோனா தடுப்பூசிப் போடும் பணிகள், பூஸ்டர் தடுப்பூசிப் போடும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

‘வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி’- இந்திய அரசு அதிரடி அறிவிப்பு!

கொரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்; அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியே செல்பவர்கள் கட்டாயம் அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கும் வகையில், சிகிச்சை மையங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் கொரோனாவால் புதிதாக மேலும் மூன்று பேர் உயிரிழப்பு

நாள்தோறும் கொரோனா பரிசோதனையானது தொடர்ந்து அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா சுய பரிசோதனை கருவிகள் மூலமும் பொதுமக்கள், தொழிலாளர்கள் பரிசோதனை செய்துக் கொள்கின்றனர். வரும் நாட்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயரக்கூடும் என்பதால், சுகாதாரத்துறை அமைச்சகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த சூழலில் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், “கொரோனா நிலவரம் குறித்து நாளை (09/10/2021) நண்பகல் 12.00 மணிக்கு நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் உரையாற்றவிருக்கிறேன். இதில் கொரோனா சூழல் குறித்தும் புதிய இயல்பு நிலைக்கான பாதை குறித்தும் நான் சிங்கப்பூரர்களிடம் பேசவிருக்கிறேன். எப்போதும் போல் அன்றாட வாழ்க்கையைத் தொடர வேண்டும்; அவசரப்பட்டு பொருட்களை வாங்கிக் குவிக்கவோ, வெளியே சென்று உணவருந்தவோ தேவையில்லை” என்று பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார். மேலும், உரையை தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்திலும், மீடியா கார்ப் நிறுவனத்தின் தொலைக்காட்சி வழியாகவும் பொதுமக்கள் நேரலையாக காணலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.