‘வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி’- இந்திய அரசு அதிரடி அறிவிப்பு!

Photo: Air India Express Official Twitter Page

உலகை ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக, கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். இதில் பெரும்பாலானோர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று குணமடைந்த நிலையில், லட்சக்கணக்கானோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில், சர்வதேச விமான சேவைகள் முழுவதுமாக நிறுத்தப்பட்டன. மேலும், பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதால், பொருளாதாரம் மிக கடுமையாகப் பாதிக்கப்பட்டதோடு, தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு, தொழில் நிறுவனங்கள் கடும் நஷ்டத்தைச் சந்தித்தனர்.

போலீசாருக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகவும், அதிகாரிகளைத் தாக்கியதாகவும் வெளிநாட்டவர் மீது குற்றச்சாட்டு

இச்சூழலில் சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான், சீனா, இந்தியா, பிரிட்டன், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனாவை வீழ்த்தும் ஆயுதமாக, தடுப்பூசியைக் கண்டுபிடித்தனர். அதைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், அண்டை நாடுகளுக்கும், இந்த தடுப்பூசி மருந்துகளை வல்லரசு நாடுகள், வளர்ந்து வரும் நாடுகள் அனுப்பி வருகின்றன.

குறிப்பாக, சிங்கப்பூரில் 82%- க்கும் அதிகமானோர் கொரோனா தடுப்பூசியை முழுமையாக, அதாவது இரண்டு டோஸையும் செலுத்திக் கொண்டுள்ளனர். அதேபோல், இந்தியாவில் 90 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டுள்ளனர். கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்களின் விகிதம் அதிகரித்து வரும் நிலையில், பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியை இந்தியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் மேற்கொண்டு வருகின்றனர்.

கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

அதன் ஒரு பகுதியாக, கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளுடன் முழுமையாக கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்ட வெளிநாட்டு பயணிகள் சிங்கப்பூர் வர அரசு அனுமதி அளித்திருந்தது. அதன்படி, ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் விமான சேவையானது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிங்கப்பூருக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினர் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையை தங்கள் குடும்பத்தினருடன் இந்தியாவிற்கு சுற்றுலா சென்று கொண்டாட ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருந்தனர். அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக இந்திய அரசின் உள்துறை அமைச்சகம் நேற்று (07/10/2021) முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது.

பிளம்பிங் பழுதுப் பார்க்கும் பட்டறையில் திடீர் தீ விபத்து!

அதன்படி, “வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சார்ட்டர் விமானங்கள் (Chartered Flights) (வாடகை விமானங்கள் அல்லது தனி விமானங்கள்) மூலம் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு வரும் அக்டோபர் 15- ஆம் தேதி முதல் புதிய சுற்றுலா விசா வழங்கப்படும். சார்ட்டர் விமானம் தவிர மற்ற விமானங்கள் மூலம் இந்தியாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு நவம்பர் 15- ஆம் தேதி முதல் சுற்றுலா விசா வழங்கப்படும். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும், அவர்களை அழைத்து வரும் விமான நிறுவனங்களும் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் முறையான கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் சுற்றுலா பயணிகளுக்கான விசா வழங்குவதை நிறுத்தி வைத்திருந்த இந்திய அரசு, சர்வதேச விமான சேவைகளையும் நிறுத்தியிருந்தது. சர்வதேச விமான பயணிகளின் சேவைக்கான தடை வரும் அக்டோபர் 31- ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், இத்தகைய அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ASPRI-Westlite Papan,Tampines தங்கும் விடுதி உட்பட 4 வெளிநாட்டு ஊழியர் விடுதிகள் கண்காணிப்பு

நவம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை தொடர்ந்து விடுமுறை நாட்கள் என்பதால், இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதன் மூலம் அரசுக்கு வரும் வருவாய் உயர்வதோடு சுற்றுலாத்துறை மீண்டும் எழுச்சிப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.