ASPRI-Westlite Papan,Tampines தங்கும் விடுதி உட்பட 4 வெளிநாட்டு ஊழியர் விடுதிகள் கண்காணிப்பு

வெளிநாட்டு ஊழியர்கள் சிங்கப்பூர் வேலை
Photo: Roslam Rahman/AFP/Getty Images

சிங்கப்பூரில் 4 வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் தொற்று குழுமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அதோடு சேர்த்து, மொத்தம் 8 குழுமங்களை சுகாதார அமைச்சகம் உன்னிப்பாக கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளது.

கொரோனாவால் புதிதாக மூன்று உயிரிழப்பு – மொத்த எண்ணிக்கை 133ஆக உயர்வு

மேலும் நேற்றைய (அக். 6) நிலவரப்படி, அமைச்சகத்தின் பட்டியலில் புதிய குழுமங்கள் எதுவும் சேர்க்கப்படவில்லை.

நான்கு தங்கும் விடுதிகள்:

  • ASPRI-Westlite Papan தங்கும் விடுதி
  • Tampines தங்கும் விடுதி
  • ஜூரோங் பெஞ்சுரு தங்கும் விடுதி 1
  • 9 Defu South Street 1ல் உள்ள தங்கும் விடுதி

சிங்கப்பூரில் நேற்றைய நிலவரப்படி, தங்கும் விடுதிகளில் உள்ள 630 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.

196 நோய்த்தொற்று பாதிப்புகளுடன், ASPRI-Westlite Papan விடுதி பெரிய குழுமமாக உள்ளது, நேற்று 29 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

உள்-விடுதி பரிமாற்றம்

அனைத்து தங்கும் விடுதி குழுமங்களிலும் விடுதிகளுக்கு அப்பால் தொற்று பரவியதற்கான ஆதாரம் ஏதும் இல்லை என MOH குறிப்பிட்டது.

மேலும், குடியிருப்பாளர்களிடையே உள்-விடுதி பரிமாற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் MOH தெரிவித்துள்ளது.

மனக் கவலையைத் தவிர, வெளிநாட்டு ஊழியர்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சனை