கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

Photo: Education Minister Chan Chun Sing Official Facebook Page

சிங்கப்பூரில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது பொது மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மேலும், பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம்; அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் செல்வோர் அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒருபுறம் கொரோனா தடுப்பூசிப் போடும் பணிகளும், முதியவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசிப் போடும் பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு செல்ல காத்திருக்கும் சிங்கப்பூர் மாணவர்கள்!

இந்த நிலையில், கல்வி அமைச்சகம் நேற்று (07/10/2021) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாக, தொடக்கநிலையில் பயிலும் 3, 4-ல் பயிலும் மாணவர்களுக்கான ஆண்டிறுதித் தேர்வுகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் மாணவர்களுக்குக் கொடுக்கப்பட்ட பள்ளி அடிப்படையிலான மதிப்பீடுகளைக் கொண்டு மாணவ, மாணவிகளின் ஆண்டிறுதித் தேர்ச்சி நிர்ணயிக்கப்படும். இருப்பினும், கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளுடன் தொடக்கநிலை 5- ஆம் மாணவர்களுக்கான ஆண்டிறுதித் தேர்வுகள் நடத்தப்படும்.

வரும் அக்டோபர் 11- ஆம் தேதி முதல் தொடக்கநிலை 3 முதல் 6 வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கும். தொடக்கநிலை 1, 2-ல் பயிலும் மாணவர்களுக்கு வரும் அக்டோபர் 13- ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கும். தொடக்கநிலை 1 முதல் 5 வரை பயிலும் மாணவர்கள், பள்ளிக்குத் திரும்புவதற்கு முன்னர், அவர்களின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் கொரோனா ‘ஆண்டிஜென் ரேபிட் பரிசோதனை’ மேற்கொண்டிருக்க வேண்டும். இன்று (08/10/2021) அல்லது நாளை (09/10/2021) கொரோனா பரிசோதனை மேற்கொண்ட பிறகு, பரிசோதனை முடிவுகளை தங்கள் பிள்ளைகள் பயிலும் பள்ளிகளில் சமர்ப்பிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ASPRI-Westlite Papan,Tampines தங்கும் விடுதி உட்பட 4 வெளிநாட்டு ஊழியர் விடுதிகள் கண்காணிப்பு

தொடக்கநிலை 1 முதல் 5 வரை பயிலும் மாணவர்கள், கடந்த செப்டம்பர் 27- ஆம் தேதி முதல் வீட்டில் இருந்து கல்வி பயின்று வருகின்றனர். சிங்கப்பூரில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் தொடங்கிய நிலையில், தொடக்கநிலை மாணவர்களுக்கானத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருப்பது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.