வீவக மறுவிற்பனை வீட்டு விலை புதிய உச்சம்!

Photo: Housing And Development Board

சிங்கப்பூரில் தற்போது கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டன. அதேசமயம், கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் கொரோனா தடுப்பூசிப் போடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அத்துடன், அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதனிடையே, பொருளாதாரம் மீட்பு, புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்காக தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது.

​​ஐந்து கார்கள் மோதி விபத்து – இரண்டு பேர் மருத்துவமனையில்…

இந்த நிலையில், வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் அடுக்குமாடி வீடுகளின் மறுவிற்பனை விலை தொடர்ந்து ஆறாவது காலாண்டாக ஏற்றம் கண்டுள்ளது. கடந்த 2013- ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் காணப்பட்ட உச்சத்திற்கு மேல் விலையேற்றம் இருந்ததாகத் தரவுகள் கூறுகின்றன. நடப்பு நிதியாண்டில் ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையிலான மூன்றாவது காலாண்டில் வீடமைப்பு வளர்ச்சிக் கழக மறுவிற்பனை அடுக்குமாடி வீடுகளின் விலைகள், அதற்கு முந்தைய மூன்று மாதங்களையும் காட்டிலும் 2.7% உயர்ந்துவிட்டன. இருப்பினும், நடப்பு நிதியாண்டில் முதல் மற்றும் இரண்டாம் காலாண்டில் காணப்பட்ட 3%-யைக் காட்டிலும் இது குறைவு ஆகும். அதேபோல், ஆண்டு அடிப்படையில் பார்க்கும் போது மறுவிற்பனை வீடுகளின் விலைகள் 12.3% உயர்ந்துள்ளது.

கொரோனா சூழலுக்கு மத்தியிலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி சரிவிற்கு இடையிலும் மறுவிற்பனை வீடுகளின் விலைகள், நடப்பாண்டு வலுவாக ஏற்றம் கண்டுள்ளது. கொரோனா காரணமாக, அமல்படுத்தப்பட்டக் கட்டுப்பாடுகளால் மனிதவளப் பற்றாக்குறை, கட்டுமான பணிகளில் ஏற்பட்ட தாமதம், சில கட்டுமான நிறுவனங்கள் தங்களது தொழிலைக் கைவிட வேண்டிய சூழல் போன்றவை வீட்டு வளர்ச்சிக் கழகத்தின் அடுக்குமாடி குடியிருப்புகளின் மறுவிற்பனை வீடுகளின் விலை உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

தீபாவளியை முன்னிட்டு இந்திய மரபுடைமை நிலையம் செய்துள்ள ஏற்பாடுகள்!

ஆரஞ்சு டீ அண்ட் டை சொத்துச் சந்தை நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுத்துறையின் துணை தலைவர் கிறிஸ்டின் சன் கூறுகையில், “புதிதாக கட்டப்பட்டு வரும் வீடுகளின் கட்டுமானப் பணிகள் முடிக்கப்படும் தேதியில் நிச்சயமற்ற நிலை நீடிப்பதால், அதிகமானோர் ஏற்கெனவே கட்டி முடிக்கப்பட்டுள்ள வீடுகளைத் தேர்வு செய்து வருகின்றன” எனத் தெரிவித்தார்.