​​ஐந்து கார்கள் மோதி விபத்து – இரண்டு பேர் மருத்துவமனையில்…

5-car accident along Whitley Road
Photo: Stomp

Whitley சாலையில் வியாழக்கிழமை இரவு (செப். 30) ​​ஐந்து கார்கள் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு பேர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

அன்று இரவு 8 மணியளவில் அந்த இடத்தைக் கடந்து சென்ற வாசகர் ஒருவர் விபத்தின் புகைப்படங்களை ஸ்டாம்ப் உடன் பகிர்ந்து கொண்டார்.

ஊழியர்களை ஏற்றிசென்ற லாரி டாக்ஸியில் மோதி விபத்து – காணொளி

இந்த விபத்தில், ​​கார் ஒன்றும் மேலும் நான்கு கார்களும் சம்பந்தப்பட்டுள்ளன.

இந்த விபத்து குறித்து தங்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இதில் 49 வயதான கார் ஓட்டுநர் மற்றும் அவரது 47 வயது பெண் பயணி ஆகியோர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.

வேன் மீது மோதி விபத்தில் சிக்கிய ஆடவர் – உதவிக்கு ஆம்புலன்ஸை அழைத்த ஆப்பிள் வாட்ச்