வேன் மீது மோதி விபத்தில் சிக்கிய ஆடவர் – உதவிக்கு ஆம்புலன்ஸை அழைத்த ஆப்பிள் வாட்ச்

Motorcyclist Apple watch alerts
Photo: Lianhe Wanbao

அதிநவீன ஸ்மார்ட் சாதனங்கள் இக்கட்டான நேரங்களில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது உண்மையே.

24 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுபவரின் ஸ்மார்ட் வாட்ச் விபத்தில் சிக்கிய அவரை காப்பாற்ற பேருதவி செய்துள்ளது. அவர் விபத்தில் சிக்கிய பின்னர் ஸ்மார்ட் வாட்ச் உதவிக்கு அழைப்பு விடுத்துள்ளது.

குடியிருப்பில் பாலியல் சேவை வழங்கியதாக 34 வயது பெண் கைது

முகமது ஃபிட்ரி என்ற அந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், வேன் மீது மோதியதில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார்.

கடந்த செப். 25 மாலை ஆங் மோ கியோ அவென்யூ 6 மற்றும் ஆங் மோ கியோ ஸ்ட்ரீட் 31 சந்திப்பில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

தனது ஸ்மார்ட் வாட்ச், தான் கீழே கடுமையாக விழுந்ததை கண்டறிந்து உடனடியாக தனது அவசரத் தொடர்புகளுக்கு அவசர செய்தியை அனுப்பியதாகக் கூறினார்.

அதில் அவரது காதலிக்கும் தகவல் அனுப்பப்பட்டது. கூடுதலாக, ஸ்மார்ட் வாட்ச் அவசர கால ஆம்புலன்ஸையும் அழைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் அவர், கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தற்போது அவர் நலமுடன் உள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆப்பிள் சீரிஸ் 4 அல்லது அதற்குப் பின் உள்ள வகைகளில் அதன் பயனர் கடுமையாக கீழே விழுவதை கண்டறிய முடியும்.

விமானத்தில் ஒரே ஒரு பயணி சிங்கப்பூர் வந்தார்… கனவு போல் இருந்தது என மகிழ்ச்சி!