இந்திய விமான சேவை எப்போது தொடங்கும் ? – இந்திய அரசு விளக்கம்

AP/Rishi Lekhi

“ஒமைக்ரான்” வகை அச்சத்தின் காரணமாக அதன் பாதிப்பு சூழலுக்கேற்ப சர்வதேச பயணிகள் விமான சேவையை மீண்டும் தொடங்குவது குறித்து முடிவெடுக்கப்படும் என இந்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த ஆண்டு மாா்ச் மாதம் வழக்கமான சர்வதேச விமான பயணிகள் சேவைக்கு தடை விதிக்கப்பட்டது.

100 ஆண்டுகளில் இல்லாத அளவு “கடும் வெள்ளம்” – மலேசியாவில் 5 பேர் பலி, 41,000 பேர் வெளியேற்றம்

இந்நிலையில், தொற்றின் தாக்கம் குறைந்த காரணத்தால் இந்த ஆண்டு டிசம்பா் 15ஆம் தேதி முதல் விமான சேவை மீண்டும் தொடங்கப்படும் என்று இந்திய அரசு அறிவித்திருந்தது.

ஆனால், இந்த புதிய வகை கிருமி ஒமைக்ரான் காரணமாக சர்வதேச விமான பயணிகள் சேவைக்கு மீண்டும் ஜனவரி 31ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், ஒமைக்ரான் சூழ்நிலையை பொறுத்து, சர்வதேச விமான சேவைகள் தொடங்கும் என்றும் மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறியுள்ளார்.

மேலும், ஒமைக்ரான் சூழ்நிலையை தொடர்ந்து உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தொற்று பாதிப்பு இலகுவாக இருக்கும் பட்சத்தில் வழக்கமான விமான சேவை மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூர் உட்பட வெளிநாடுகளில் இருந்து ஈரோடு வந்த 183 பேர் – தீவிர கண்காணிப்பு