சிங்கப்பூர் உட்பட வெளிநாடுகளில் இருந்து ஈரோடு வந்த 183 பேர் – தீவிர கண்காணிப்பு

(Chennai Airport)

சிங்கப்பூர் மற்றும் ஸ்பெயின் நாட்டில் இருந்து தமிழ்நாட்டின் ஈரோட்டுக்கு வந்த 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவர்கள் இருவருக்கும் ஒமைக்ரான் பாதிப்பு ஏதும் உள்ளதா? என்ற கோணத்தில் அவர்களின் மாதிரிகள் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மலேசியாவில் கடும் வெள்ளம்: தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், 21,000க்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்

அவர்களின் சளி, ரத்த மாதிரி சென்னை பரிசோதனை ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.

அந்த பரிசோதனை முடிவுகளை வைத்து தான் அடுத்த கட்ட பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

அதில் அறிகுறி இருந்தால், பின்னர் பெங்களூருவில் உள்ள ஆய்வகத்திற்கு மாதிரி அனுப்பி வைக்கப்படும். அதன் பிறகு தான் ஒமைக்ரான் பாதிப்பு அவர்களுக்கு உள்ளதா என்பது தெரியவரும்.

பல்வேறு வெளிநாடுகளில் இருந்து ஈரோடு மாவட்டத்துக்கு இதுவரை சுமார் 183 பேர் வருகை தந்துள்ளனர்.

இவர்கள் பரிசோதனையில் ஈடுப்படுத்தப்பட்டு தற்போது அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

ஓமிக்ரான் பாதிப்பால் ஊழியர் தங்கும் விடுதிகளில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா? – அமைச்சர் பதில்